வீசத் தொடங்கிய கோடை வெப்பம் - ஒகேனேக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை காலம் தொடங்கி வெப்பம் வீசுவதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தனர்


தொடர்ந்து வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு ஒகேனேக்கல்லில் பரிசல் பயணம் செல்வதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து கோடை காலம் தொடங்கி வெப்பம் வீசுவதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனேக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஞாயிறு விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

