மேலும் அறிய
Advertisement
’கிளி பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டன்’- ஒப்பந்ததாரரை லெப்ட் ரைட் வாங்கிய திமுக எம்.பி ?
அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட நவீன கழிவறையை திறக்காமல் திரும்பிச் சென்றார், செந்தில் குமார் எம்.பி.
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 11.50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை கட்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் நிதி ஒதுக்கி இருந்தார். இந்த நிதியில் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பே, அனைத்து பணிகளை முடித்துவிடுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இன்று நவீன கழிப்பிடத்தை திறக்க, எம்பி செந்தில்குமார் வந்திருந்தார்.
அங்கு பார்த்தபோது சிறப்பாக, அவசர அவசரமாக இரவோடு இரவாக வண்ணப் பூச்சுக்கள் அடிக்கப்பட்டதை கண்டறிந்தார். இதனை அடுத்து நவீன வசதிகளுடனான கழிப்பறையை, தரமான பொருட்களை கொண்டு கட்டாமல், சாதாரணமாக பொதுக் கழிப்பறைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி கட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணிகள் முழுமையாக முடிக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நவீன வசதிகளுடன் அமைத்தால் மட்டுமே கழிப்பிடத்தை திறக்க முடியும் என்றும், கழிப்பிடத்தில் மின்சார வசதி கூட இல்லை எனக் கூறினார். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே கிளி பிள்ளைக்கு சொல்வதை போல் சொல்லிட்டேன். ஆனாலும் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை.
இது போன்று முழுமையாக பணிகளை முடிக்கவில்லை என்றால், அரசு சார்பில் கட்டப்படும் கட்டிட பணிகளில் உங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாது என ஒப்பந்ததாரரை, எச்சரித்தார். தொடர்ந்து மொத்தப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பணி முடிந்த பிறகே வந்து திறப்பேன் என ஒப்பந்ததாரரை கடிந்து கொண்டார். தொடர்ந்து எம்பி செந்தில்குமார், புதியதாக கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை திறக்க மறுத்து விட்டு, திரும்பி சென்றார். தொடர்ந்து அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட நவீன கழிவறையை எம்பி திறக்காமல் திரும்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பகுதிகள் நிறைந்துள்ள தருமபுரி மாவட்டம் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. கல்வியில் தொடர்ந்து பின் தங்கிய நிலையில் தருமபுரி மாவட்டம் இருந்து வரும் நிலையில் இங்குள்ள மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு பிழைப்புத் தேடி செல்லும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம அரசுப்பள்ளிகளிலும் கல்வி சார்ந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion