மேலும் அறிய

தருமபுரி: சொத்து தகராறில் தந்தையை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்

விவசாயி கோபால் தனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தினை, தனது மகன்,  மகள்கள் நான்கு பேருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் என எண்ணியுள்ளார்

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபால் (70), என்பவர் தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். விவசாயி கோபாலுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில் தனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தினை, தனது மகன்,  மகள்கள் நான்கு பேருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் என எண்ணியுள்ளார். இதில் கடைசி இரண்டு மகள்களும் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால் மூத்த மகளான வாசுகி மட்டும், சொத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.  இதனால் மூத்த மகள் வாசுகிக்கு சொத்தின் ஒரு பகுதியை, பிரித்து தர வேண்டுமென எண்ணிய கோபால், மகன் முருகேசனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் இதனை முருகேசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை கோபாலுக்கும், மகன் மருகேசனுக்கும் இடையே கடந்த  ஆறு மாதமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று அரூர் காவல் நிலையத்தில் கோபால் புகார் கொடுத்துள்ளார். இதில் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

தருமபுரி: சொத்து தகராறில் தந்தையை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்
 
இந்த நிலையில் இன்று விடியற்காலை மீண்டும், தந்தை மகனுக்கிடையே  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், முருகேசன்  இரும்பு கம்பியை எடுத்து, தந்தை கோபால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கோபால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து தந்தையை கொலை செய்த முருகேசன் தலைமறைவானார். 

தருமபுரி: சொத்து தகராறில் தந்தையை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்
 
இந்த தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனசிர் தலைமையிலான காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட கோபால் சடலத்தை கைப்பற்றி,  அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து, அரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தந்தையை கொலை செய்து விட்டு, தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர். தொடர்ந்து நிலத் தகராறில், மகனே தந்தையை, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget