மேலும் அறிய
Advertisement
பாப்பிரெட்டிபட்டி ஸ்ரீ காணியம்மன் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ காணியம்மன் தேர் வீதி உலா வெகுவிமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துகொட்டை, உப்பு நவதானியங்களை வீசி வாழிபாடு.
பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ காணியம்மன் தேர் வீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துகொட்டை, உப்பு நவதானியங்களை வீசி வழிபாடு செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி அருகே இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இருளப்பட்டி காணியாம்மன் தேர்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆணி மாதம் முதல் வாரத்தில், அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிபட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி, காந்தி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி காணியம்மன் தேர் திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த திருவிழாவின் முக்கிய நாளான இன்று, ஸ்ரீ காணியம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பின் பொதுமக்கள் ஒன்று கூடி, தேர் வீதி உலாவினை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இந்த திருவிழாவுக்கு அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து, தேர் வீதி உலாவின்போது தேர் மீது முத்துக்கொட்டை, உப்பு, பொறி, நவதானியங்களை வீசியெறிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு செய்து விட்டு சென்றனர். இந்த தேர்திருவிழாவுக்கு பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த திருவிழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி அரசின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் அரூர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 120 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இருளப்பட்டி காணியம்மன் கோவில் சேலம்-வேலுர் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், கூட்ட நெறிச்சல் காரணமாக போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் தொகுப்பு முறை ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஊராட்சி அலுலரகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஊரட்சி மன்ற தலைவா்கள் மாவடட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்ணாவில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் திட்ட பணிகளுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் தொகுப்பு முறை ஒப்பந்தம் வைக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனால் கிராமப்புறங்களில் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகள் தரம் இல்லாமல் பணிகளை ஒப்பந்ததாரர்கள் முடிக்கும் சூழ்நிலை உள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளிலேயே அதிகாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகள் ஊராட்சிகளுக்கு போதுமான நிதி உதவி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். அதனையடுத்து திட்ட அலுவலர் பாபு ஊராட்சி மன்ற தலைவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் இந்த தொகுப்பு முறை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதனை அரசின் பார்வைக்கு எடுத்த செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அடுத்த கட்டமாக கிராம மக்களை ஒன்றிணைத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion