மேலும் அறிய

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள்  பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல்.

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
தருமபுரி பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர். புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் தற்காலிகமாக தருமபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் இந்த புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதிக்கான கட்டிடங்கள் இன்னும் கட்டப்படவில்லை. இதனால்  தருமபுரி அரசு கலை கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தினமும் அரசு கலைக் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து, பேருந்து நிலையத்திலிருந்து பைசுஹள்ளிக்கு தினமும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
 
தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்
 
மேலும் பைசுஹள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளதால், இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில், ஒரே பேருந்தில் பயணம் செய்கின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், கூட்ட நெரிச்சலில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி. மேலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் கல்லூரி நேரத்திற்கு தகுந்தார் போல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பலமுறை அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்
 
இதனால் ஆத்திரமடைந்த பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் திடீரென தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தருமபுரி மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் மற்றும் காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு கல்லூரிகள் ஒரே இடத்தில் இருப்பதால், குறித்த நேரத்தில் வருவதற்கான பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக கல்லூரி நேரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா? - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?
தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா? - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
எலக்ட்ரிக் யூனிக் சைக்கிளில் உலகை சுற்றும் சேலத்து இளைஞர்; ஒற்றை சக்கரம் கொண்ட இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget