Watch Video: பள்ளி நண்பர்கள் நிறைந்த அரங்கில் பாடலை பாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நண்பர்கள் மத்தியில் 1980-ஆம் ஆண்டு பள்ளி நிகழ்ச்சியில் அவர் பாடிய ஆங்கில பாடலை முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஆங்கிலப் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மான்போர்ட் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 1986-ஆம் ஆண்டு அப்பள்ளியில் படித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது நண்பர்கள் மத்தியில் 1980-ஆம் ஆண்டு பள்ளி நிகழ்ச்சியில் அவர் பாடிய ஆங்கில பாடலை முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஆங்கிலப் பாடல் பாடி அசத்தியுள்ளார்.
பள்ளி நண்பர்கள் மத்தியில் பாடல் பாடி அசத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.@abpnadu @SRajaJourno @draramadoss @pmk_tamilnadu#abpnadu #ABPnews #PMK #AnbumaniRamadoss #Salem #montfort pic.twitter.com/xUoh5Qs7zY
— Kelikaimanidhan (@Sathishsv1906) September 18, 2022
1980-ஆம் ஆண்டு மான்போர்ட் பள்ளியில் அவருடன் படித்த நண்பர் பிரபு ராம் என்பவர் அப்போது அந்த ஆங்கில பாடலுக்கு இசையமைத்துள்ளார். இசையமைத்த அன்புமணியின் நண்பர் பாடலுக்கான இசையை மறந்து விட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் அந்தப் பாடலை எந்தவிதமான தயக்கமும் இன்றி பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியது.
பொதுவாக சமூக வாழ்க்கையில் ஈடுபடும் நபர்கள் நண்பர்களுடன் நேரங்களை செலவிடுவது மிகவும் குறைவு. ஆனால் அன்புமணி ராமதாஸ் ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணையும் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

