மேலும் அறிய
Advertisement
தருமபுரி : விஷபூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்
பாலக்கோடு அருகே பள்ளியிலிருந்து வரும் வழியில் விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடாசலம் மகன் பிரியதர்ஷன் (11), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 26ம் தேதி பிரியதர்ஷன் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஏதோ ஒரு பூச்சி கடித்துள்ளது. இதனை தொடர்ந்து உடலில் ஆங்காங்கே கொப்பளம் வந்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த மாணவன், பெற்றோரிடம் விஷபூச்சி கடித்ததாகவும், உடம்பெல்லாம் கொப்பளமாக வருவதாகவும், எரிச்சல் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென இரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது சிறுவனை பரிசோதித்த மருத்துவர், தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவன் விஷ பூச்சி கடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தம்மனம்பட்டி அழகானந்தர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழமையான பூலோக நாயகி உடனமர் பூலோகநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் தம்மணம்பட்டி பகுதியில் சுமார் 130 ஆண்டுகள் பழமையான அழகானந்தர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள பூலோக நாயகி உடனமர் பூலோகநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக கடந்த 21ஆம் தேதி முகூர்த்த கல் நடைபெற்று தீர்த்த குடம் பால்குடம் அழைத்தல் கங்கை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க துவார, பூஜை அக்னி அலங்காரம், மூர்த்தி ஹோமம், அதனை தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மூல மந்திரம் நடைபெற்றது. பூலோக நாயகி சமேத பூலோகநாதர் ஆலய விமான கோபுரம் மற்றும் ஸ்ரீ அழகானந்தர் அதிஷ்டான விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேக தீபாரதனை மூலமூர்த்தி சுவாமிக்கு பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. ஸ்ரீ ல ஸ்ரீ அழகானந்தர் சுவாமி அதிர்ஷ்டான மூர்த்திக்கு குருபூஜை காண மகாபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion