75th Independence Day: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை!
மூவர்ண வண்ண விளக்குகளால் மேட்டூர் அணை, அலங்கரிக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கிறது.
நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதமரின் உத்தரவுப்படி அனைத்து உள்ளங்களிலும் தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூவர்ண வண்ண விளக்குகளால் மேட்டூர் அணை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாநகராட்சி அலுவலகம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் என பல இடங்களில் வண்ண விளக்குங்களால் அலங்கரிக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் தேசியக்கொடி போன்று காவி நிறம், வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறத்தில் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு தண்ணீரில் ஒளிர வைக்கப்பட்ட வருகிறது. சிறு பாய்ந்து வரும் காவிரி ஆற்றல் இந்திய திருநாட்டில் பெருமையை உணர்த்தும் விதமாக மூவர்ண வண்ண விளக்குகளை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேட்டூர் அணை 16 கண் மதகின் புதிய பாலத்தில் குவிந்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நவீன 3டி விளக்குகள் மூலம் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் தேசிய கொடி பறக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர பொதுமக்கள் மாலை நேரங்களில் கண்டு பிடித்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான மின் விளக்குகளால் இந்திய திருநாட்டின் மூவர்ண நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வண்ண விளக்குகளை கொண்டு இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கிறது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வண்ண விளக்குகள் மூலம் பாரதி திருநாட்டில் மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வண்ண இலக்குகளை கொண்டு மூவர்ணக் கொடி ஒளிர வைக்கப்பட்டுள்ளது.
நாளை 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மேட்டூர் அணை, சேலம் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.