மேலும் அறிய

மின் திட்டத்தை அதானியிடம் கொடுக்க ராஜபக்சேவை மோடி வற்புறுத்தினார்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

குறிப்பட்ட ஒரு நபருக்கோ நிறுவனத்திற்கோ திட்டத்தை அளிக்க அனுமதி வழங்கியதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் இலங்கை மின்துறை தலைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுவிடம் நேரடியாக அளிக்க இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வற்புறுத்தியதாக அவரே கூறினார்" என திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். 

இந்த திடுக்கிடும் தகவலை பகிர்ந்து இரண்டே நாள்களில், மின்துறை தலைவர் தான் சொன்ன கருத்தை திரும்ப பெற்றுள்ளார். உணர்ச்சி வசப்பட்டு பொய் சொல்லிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

பொதுத்துறைக்கான நாடாளுமன்ற கமிட்டியில் வாக்குமூலம் அளித்த சிலோன் மின்துறை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்ட், "500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்துவதாக இலங்கை அதிபர் என்னிடம் தெரிவித்தார். 

கடந்த 2021ஆண்டு, நவம்பர் 24ஆம் தேதி, நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அதிபர் என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் எனக் கூறினார்" என்றார். இலங்கையின் வட கடலோர பகுதியில் அமைந்துள்ள 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை கட்ட அதானி குழுமம் எப்படி தேர்வு செய்யப்பட்டது என நாடாளுமன்ற குழு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

விசாரணையின்போது இதுகுறித்து விரிவாக விளக்கிய பெர்டினாண்ட், "அதானி நிறுவனத்திற்கு திட்டத்தை அளிப்பது குறித்து முதலீட்டு குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதை அதிபரிடமே கூறினேன். இதுகுறித்து பரிசீலிக்குமாறு அவர் வற்புறுத்தினார்.

நிதிச் செயலாளர் தேவையானதைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினேன். இது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதை நான் சுட்டிக்காட்டினேன்" என்றார்.

"இந்த காற்றாலை மின்திட்டத்தை ஏலம் விடவில்லையா" என விசாரணையின்போது, நாடாளுமன்ற குழு தலைவர் சரிதா ஹேரத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பெர்டினாண்ட், "இது அரசுக்கும் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம். ஆனால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த விலைக் கொள்கையின்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்" என்றார்.

1989 மின்சார சட்டத்தில், போட்டி ஏலத்தை நீக்கி நாடாளுமன்றம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிய நிலையில், இந்த பொது விசாரணை நடைபெற்றது. அதானியிடம் திட்டத்தை ஒப்படைக்கவே, இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததாக பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா புகார் தெரிவித்துள்ளது.

குறிப்பட்ட ஒரு நபருக்கோ நிறுவனத்திற்கோ திட்டத்தை அளிக்க அனுமதி வழங்கியதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்திருந்தார். 

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget