மேலும் அறிய

வணிகப் பிரிவு தலைவர்... வேட்பாளர்... இப்போ ‛டிஸ்மிஸ்’; பாஜக மாநில துணை தலைவர் நீக்கத்தின் பின்னணி!

மாவட்ட பாஜக துணைத் தலைவர் அருணை ஆனந்தனுக்கு டோக்கன் வழங்கும்படி பகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், சில பகுதிகளில் டோக்கன்கள் வினியோகிக்கபடாத நிலையில் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

திருவண்ணாமலை  நகர்பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவர், சென்னையில் வசித்து வருகிறார் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான , தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள முருகனின் ஆதரவுடன், அக்கட்சியில்  இணைந்த தணிகைவேலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் வணிகப் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் பதவி கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து தனக்கென  தனி கோஷ்டி அமைத்துக்கொண்டு அரசியல் செய்து வந்த தணிக்கை வேல் இவருக்கு திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன் ஒத்துபோகாததை அடுத்து மேல் எடத்துக்கு புகார்கள் அனுப்பபட்டது. திருவண்ணாமலையில் தணிக்கை வேலூடன் ஒரு கோஷ்டி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு கோஷ்டியும் தனிதனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

வணிகப் பிரிவு தலைவர்... வேட்பாளர்... இப்போ ‛டிஸ்மிஸ்’; பாஜக மாநில துணை தலைவர் நீக்கத்தின் பின்னணி!

மேலும் முருகனுடனான நெருக்கம் காரணமாக, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தணிகை வேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்த பொதுப் பணித் துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்டு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார்.  

தேர்தல் பணியில் மெத்தனமாக செயல்பட்டது, மற்றும் பாஜக  கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாமல் அதிகாரமிக்கவராக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு, கட்சி தலைமைக்கு தவறான தகவல்களைக் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மீது, அக்கட்சியினர் முன் வைத்தனர்.

வணிகப் பிரிவு தலைவர்... வேட்பாளர்... இப்போ ‛டிஸ்மிஸ்’; பாஜக மாநில துணை தலைவர் நீக்கத்தின் பின்னணி!

இந்நிலையில் , திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை ரமணா நகர் 3-வது தெருவில் வசிக்கும் மாவட்ட பாஜக துணைத் தலைவர் அருணை ஆனந்தனுக்கு டோக்கன் வழங்கும்படி பகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு சில நகர்பகுதியில் டோக்கன்கள் வினியோகிக்கபடாத நிலையில் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அருணை ஆனந்திடம் தேர்தலுக்காக ரூ.28 லட்சம்  வாங்கியுள்ளதாகவும். அதனை அருணை ஆனந்தன் அவரிடம் திருப்பி கேட்கவே இருவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது 

இவர்களுக்கிடையேயான மோதல் முற்றி கடந்த ஏப்ரல் மாதத்தில் அருணை ஆனந்தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், இவரது பெயரும் தொடர்புப்படுத்தி பேசப்பட்டது. இது தொடர்பாக மாநில பொறுப்பாளர் மற்றும் தேசிய தலைமைக்கு அடுக்கடுக்காக, உள்ளூர் பாஜகவினர் மூலமாக புகார் தெரிவிக்கப்பட்டது.

வணிகப் பிரிவு தலைவர்... வேட்பாளர்... இப்போ ‛டிஸ்மிஸ்’; பாஜக மாநில துணை தலைவர் நீக்கத்தின் பின்னணி!

இதற்கிடையில், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுற்றுபயணம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தணிகைவேலை நெருங்கவிடவில்லை. இதனால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் வணிகர் பிரிவின் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எஸ்.தணிகைவேல் நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நேற்று இரவு (2-ம் தேதி) அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி சார்ந்த தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Embed widget