மேலும் அறிய

திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்

புதியதாக ஒரு கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்து, கூடுதலாக சீட் கொடுத்தால், மற்றவர்கள் சந்தோஷப்படுவார்களா? என திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைத்தை விமர்சித்த திருமாவளவன், கூட்டணியில் இருந்து விலக காரணம் யார் என விளக்கியுள்ளார்.

திமுக கூட்டணி டூ தவெக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. ஆனால் தனித்து போட்டியிட்ட தவெகவிடம் திமுக தோல்வி அடைந்தது. அதே நேரம்  தவெகவிற்கு தனிப்பெருமை கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெக அணியில் இணைந்தது. மேலும் அமைச்சரவையில் பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவகவில் இணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாட்டை திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அவர் பேசுகையில்,

அரசியலுக்கு வந்தது ஏன்.? திருமா விளக்கம்

இன்று பதவி, பவுசுக்காக கூட்டணி மாறியதாக, வன்மத்தை கக்குகிறார்கள். பதவி தான் முக்கியம் என்றால், நான் 10 ஆண்டுகள் தேர்தல் அரசியலை முன்னெடுக்கின்றது கற்க மாட்டேன். தேர்தல் அரசியலுக்கு எப்படி வந்தோம் என்றால், கலைஞர் முதல்வராக இருந்த போது தேர்தலில் பாமக, திமுகவோடு கூட்டணி அமைக்க, விடுதலை சிறுத்தை கட்சி தோழர்கள் மீது அப்போது காவல் துறை பாமக சொல்வதை வைத்து வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஒரு வழக்கு, இரண்டு வழக்கை வைத்து கடலூர் போன்ற மாவட்டங்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

அப்போது தான் மைய குழுவை கூட்டி, தேர்தல் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விவாதித்தோம். வாக்களிக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். யாருக்கு வாக்களிக்க கூடாது என்று சொல்ல வேண்டும் என்று தான் அரசியலிக்கு வந்து முதலில் தனித்து போட்டியிட்டோம். ஒரு திரை கதாநாயகனா இருந்திருந்தால், தலித் அல்லாத வராக இருந்திருந்தால் தூக்கி கொண்டாடிய இருப்பார்கள். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்ற தொகுதி கேட்டபோது, மறுக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக கூட்டணியில் இருந்து விலகி, சிதம்பரத்தில் போட்டியிட்டேன்.

திருமாவளவன் தான் முதலமைச்சர் - ஆதவ் அர்ஜூனா

2024 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது‌‌.  ஆனால் நான் கூட்டணி உடைய விடமாட்டேன் என்று வெளிப்படையாக சொன்னேன். நம்மோடு இருந்த ஆதல் ஆர்ஜூனா கூட்டத்தில் பேசினார். அடுத்த முதல்வர் திருமாவளவன் தான் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்‌ என சொன்னார். 

மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கூட்டணியில் இருந்து வெளியில் வாருங்கள் என்று சொன்னார். ஆனால் நான் இந்த காரணத்திற்காக கூட்டணியை விட்டு வெளியே வரமாட்டேன் என்று மறுதலித்தேன். விஜய் அரசியல் கட்சி தொடங்காத காலத்திலே நான் திமுக கூட்டணி விடாது வரமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். திமுக கூட்டணியை கட்டி காப்பதில் உறுதியாக இருந்தேன். பலர் ஆசைவார்த்தை காட்டி, தூதூ அனுப்பினார்கள். இதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறவில்லை.

கூட்டணி கட்சியை திமுக தக்கவைக்கவில்லை

கூட்டணி கட்சிகளை தக்க வைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். காங்கிரஸ் கட்சியோடு நீண்ட நாட்களாக உளவியல் மோதலை வைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு சமயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள். புதியதாக ஒரு கட்சியை கொண்டு வந்து, கூடுதலாக சீட் கொடுத்தால், மற்றவர்கள் சந்தோஷப்படுவாராகளா? நாம் தோற்றாலும் ஒன்றாக இருப்போம் என்றே சொல்லவில்லை. அதை கூட்டணி தலைமை செய்யவில்லை. 

திமுகவோடு காங்கிரஸ் உறவு நல்லிணக்கமாக இல்லை. பதவி ஆசை இருந்திருந்தால், காங்கிரஸ் போனதுமே நாமே போயிருப்பேன். விஜயே கூப்பிட்டார். நீங்களே வாருங்கள். அமைச்சராகுங்கள் என்று சொன்னார். நான் மறுதலித்தேன். கம்யூனிஸ்ட்கள் அறிவித்த போதே சொல்லியிருப்பேன். வெளியில் இருந்துதான் ஆதரவு ஒன்று சொன்னேன். ஆனால் 19 நாட்களுக்கு பிறகு என்ன நடந்தது. நீங்கள் கொள்கை பிடிப்போடு இருப்பீர்கள் என்பதற்காக, ஒரு எளியவன் அமைச்சரானால் தடுக்க கூடாது என்று என் உள்மனம் சொன்னது. அதனால் அந்த முடிவை எடுத்தேன்.

வன்னியரசுக்கு அமைச்சர் பதவி ஏன்.?

என்னோடு 30 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த தம்பிக்கு அமைச்சர் பதவி கொடுத்தேன். வன்னியரசை அழைத்து, உனக்கு ஆசை இருக்கா என்று கேட்டேன். உங்கள் விருப்பம் என்று சொன்னார்.  அதன் பிறகுகே திருமாவளவனை நம்பிய தம்பி 10 நாளாவது அமைச்சராக இருக்கட்டும் என முடிவெடுத்தேன். விசிக கூடாரம் காலி என்று சொன்னார்கள். விசிகவினர் விஜய் பின்னாடி சென்றுவிட்டார்கள் என்று பரப்பினார்கள்.  அட அர்ப்பர்களே உள்ளுந்தூர் பேட்டை கூட்டத்தை நடத்தவே முடியவில்லை‌. வந்தது 25 சதவீதம் தான்‌. வெளியே இருந்த கூட்டம் வந்திருந்தால், பலபேர் செத்திருப்பார்கள்.

ஜென்சி, ஜென்சி என்று சொல்கிறீர்கள். இன்று விசிக ஜென்சி கூட்டமாக இருக்கிறது.எங்களை திமுக தான் கைவிட்டது‌. பலியிடும் போது வெளியே வந்ததா தான் ஆடு பாதுகாப்பாக இருக்கும். கதவை முழுவதும் திறந்து வைத்துவிட்டால், ஆடுகள் வெளியே தானே போகும். பிடித்து வைக்கும் திறன் இல்லை , இதை  ஏன் புரிந்துக் கொள்ளவில்லை‌. விசிக, காங்கிரஸ், இடது சாரிகள் வெளியேறியது திமுக தான் காரணம். தவெகவை சுட்டி காட்ட முடியாது. திமுக அனுகுமுறை தான் காரணம். கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போடச் சொன்னேன். ஆனால் செய்யவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

எதுக்கு இந்த BUILD UP... மக்களே இறங்கி CLIMAX எழுதுவதற்குள் விழித்துக் கொள்வாரா முதல்வர்? டிடிவி தினகரன் சரவெடி!
எதுக்கு இந்த BUILD UP... மக்களே இறங்கி CLIMAX எழுதுவதற்குள் விழித்துக் கொள்வாரா முதல்வர்? டிடிவி தினகரன் சரவெடி!
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்! ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசிய விஜய்.. என்ன சொன்னார்?
மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்! தனித்தனியாக அழைத்துப் பேசிய விஜய்.. என்ன சொன்னார்?
மூன்று நாட்கள் எம்எல்ஏக்கள் யாரும் ரிசார்ட்டை விட்டு போகக்கூடாது? சாட்டையை சுழற்ற போகும் முதல்வர் விஜய்!
மூன்று நாட்கள் எம்எல்ஏக்கள் யாரும் ரிசார்ட்டை விட்டு போகக்கூடாது? சாட்டையை சுழற்ற போகும் முதல்வர் விஜய்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
Embed widget