Sitaram Yechury: எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் சிவப்பு கொடியேற வேண்டும் - சீதாராம் யெச்சூரி
தலித் மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிறதே அங்கெல்லாம் சிவப்பு கொடி உயர வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி விழுப்புரத்தில் பேசியுள்ளார்.
விழுப்புரம்: ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக ஆட்சியில் அடிதட்டு மக்களை நசுக்கிற வேலை செய்து வர்ணாசிரமத்தை கொண்டு வரும் செயலில் பாஜக செயல்படுவதாகவும் தலித்களுக்கு எதிராக பல இன்னல்கள் பா.ஜ.க. அரசில் நிகழ்வதாகவும் சீதாராம் யெச்சுரி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்திடவும், சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடவும், பட்டியலின பழங்குடி மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சுரி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் பொன்முடி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்கிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சுரி, "தலித் மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிறதே அங்கெல்லாம் சிவப்பு கொடி உயர வேண்டும். சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறோம். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பு இன்றைக்கு மனிதர்களுக்கு இருக்கிறதா என்பது இல்லை.
சமூக நீதிக்காக பல தலைவர்கள் போராடினார்கள். ஆனால் 75 ஆண்டுகளுக்கு பிறகும் சமூக நீதி கிடைக்கவில்லை உத்திரபிரதேசம் போன்ற மாநிலத்தில் தலித் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக ஆட்சியில் அடிதட்டு மக்களை நசுக்கிற வேலை செய்கிறது. வர்னாஸ்மித்திரத்தை கொண்டு வரும் செயலில் தான் பாஜக செயல்படுகிறது.
பாசிச இந்துவா கொள்ளை கோட்பாட்டினை உயர்த்தி கொண்டிருக்கிறது பா.ஜ.க. சாதிய ஆவணபடுகொலை அதிகரித்து கொண்டிருக்கிறது. கையால் மலம் அள்ளும் நிலை நாட்டில் பல இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கு எதிராக பல இன்னல்கள் பா.ஜ.க. அரசில் நிகழ்கிறது. இந்தியாவில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் நிலை மாறவில்லை. இதை போன்ற மக்களுக்கு பொருளாதார ரீதியாக அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மாற்றம் செய்யப்படும். மோடி அரசாங்கம் தலித் முஸ்ஸீம் மாணவர்களுக்கு வெளிநாடு சென்று கல்வி பயில்வதற்கான உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்து கொண்டிருக்கிற பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினேன். அப்போது மதச்சார்பற்ற அமைப்புகளை ஒன்றினைக்க வேண்டுமென கூறினேன். கர்நாடக தேர்தலில் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றி தந்துள்ளார்கள், ஒளிமையமான இந்தியாவை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பெண்களுக்கு எதிராகவும் தலித் மக்களுக்கும்,கலப்பு திருமணங்களுக்கு எதிரான உள்ள பா.ஜ.க. பின்னோக்கிய இருளை கொண்டு வருகிற செயலில் ஈடுபடுவதால் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றினைந்து போராட்ட வேண்டிய நிலை உள்ளது. சமூக நீதி போராட்டத்தினை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது தமிழ்நாடு அதற்கு உதாரணமாக உள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மனிதமே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் எரித்து கொள்ளும் சமரமற்ற நிலை உள்ளது. கூட்டணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழகர்களை அடிமை படுத்தி வைத்துள்ளார்கள் என் எல் சியில் பணியில் சேர்க்கபடுபவர்கள் ஒருவர் கூட தமிழர் இல்லை தனியார் தொழிற்சாலையில் இருந்து விஷ சாராயத்தினை குடித்து சிலர் இறந்துள்ளனர். இதனையும் அரசிலாக்குற நிலைமை தான் உள்ளது.
காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி மேடை பேச்சு
மதசார்பின்மை என்பது மதவாதத்திற்கு எதிரான அணி என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் ஒரு பொது கூட்ட மேடையில் நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்று பேசியிருந்தார். அரசியலமைப்பு சட்டம் கூறுவதை செய்தாலே பல பிரச்சனைகள் குறையும் ஆனால் அதனை அகற்றவே ஆர் எஸ் எஸ் இயக்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பாஜக ஆர் எஸ் எஸ் இயக்கதிற்கு சம்மட்டி அடியாக கர்நாடாக தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், சிந்தாந்ததின் வெற்றியாகவே கர்நாடகாவின் வெற்றி உள்ளதாக கூறினார். இந்தியாவில் புதிய அமைப்பினை உருவாகியுள்ளோம் மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் ஒன்றினைந்துள்ளனர். ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற பிற்போக்கு வாதிகளிடம் விட்டு விடக்கூடாது என்பதற்காக ஒன்றினைந்துள்ளோம். தமிழகத்தின் முதலமைச்சர் சரியாக சிந்தித்து செயல்படுகிறார்.
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மேடை பேச்சு
ஆங்கிலமும் தமிழும் தேவை என்பது தான் இருமொழிக் கொள்ளை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.. திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் வந்த பிறகு பட்டியலின மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளோம். ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு வசதிகழகம் தொடங்கியதே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் என்றும் திமுகவும் மார்க்சிஸ்ட் கொள்கை ரீதியாக ஒரே நோக்கம் கொண்டவர்கள்
அடித்தள மக்களுக்கு உழைக்கும் தலைவராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார். ஜாதிய வெறிதனங்கள் இன்னும் சில இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டில் நடைபெறுகிற மதவாத ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதால் மதச்சார்பற்ற அனைவரும் ஒன்றினைந்துள்ளோம் கருப்பினையும், சிவப்பினையும் சேர்த்து பிடிக்கும் இயக்கம் தான் திமுக நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பின்மை கட்சிகளை ஒன்றினைத்து மதவாத பாஜக ஆட்சியை அகற்றிட வேண்டும்.