மேலும் அறிய

Ponvannan : "காருக்கு அழுவுறாங்க.. மனிதாபிமானம் எங்க இருக்கு?" : பிரதமர் மோடி குறித்து என்ன சொன்னார் நடிகர் பொன்வண்ணன்?

சில வினாடிகள் கடந்தும் பிரதமர் தன்னை பார்க்காததை கண்டு, அடுத்த நபரிடம் நகர்ந்ததாக, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.

இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தன் பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 15 வது இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் எதிர்காட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டு, பாஜக கூட்டணி சார்பாக திரவுபதி முர்மு நிருத்தப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெற்று, புதிய குடியரசு தலைவராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய குடியரசு தலைவர்

பாஜக கூட்டணி கட்சியினர் ஆதரவு என்று மட்டும் அல்லாமல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். பகுஜன் சமாஜ். சிரோமணி அகாலி தளம் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பெரும் ஆதரவோடு போட்டியிட்ட திரௌபதி முர்மு இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக பதவி ஏற்றார். இதனை அடுத்து குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெறுவது வழக்கம். அதற்காக சென்ட்-ஆப் விழா நடைபெறும். அந்த விழாவில் பிரதமர் உட்பட முக்கிய நிர்வாகிகள், எம்பிக்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.

Ponvannan :

ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா

ராம்நாத் கோவிந்திற்கும் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பலரும் எழுந்து நிற்க ராம்நாத் கோவிந்த் ஒவ்வொருவர் முன்பாக கை எடுத்து கும்பிட்டு, நன்றி கூறியபடி வந்தார். அப்போது முன் வரிசையில் அருகருகே நின்றுகொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்: Jasprit Bumrah Ruled Out: ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு... பும்ரா விலகலா?-காரணம் என்ன?

போட்டோக்கு போஸ் கொடுத்த மோடி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடிக்கு நன்றி சொன்னபோது அவர் பின்னால் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தகே மராமேன்களையேபா ர்த்துக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தை கவனிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் சில வினாடிகள் ராம்நாத் கோவிந்த் அவரையே பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்றுகொண்டு இருந்தார். சில வினாடிகள் கடந்தும் பிரதமர் தன்னை பார்க்காததை கண்டு, அடுத்த நபரிடம் நகர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.

Ponvannan :

நடிகர் பொன்வண்ணன் 

ஒரு மேடையில் பேசிய நடிகரும், இயக்குநரும், ஓவியரும் ஆன பொன்வண்ணன், இந்த நிகழ்வு குறித்து மிகவும் ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், "ஃபோர்டு தொழிற்சாலை க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதை பார்த்ததுல இருந்து எனக்கு மனசு அவ்வளவு பாரமா இருந்தது. ஒரு கார், கடைசி கார் அவங்க தயாரிச்ச கார அவ்வளவு சென்டிமென்ட்டோட அனுப்பி வைக்குறாங்க. அந்த கார் கூட போட்டோ எடுத்துக்குறாங்க, சிலர் அழுவுறாங்க. ஒரு உயிரில்லாத ஒரு கார் போகும்போது அழுவுறாங்க. அவங்க தினமும் எத்தனையோ கார்கள் அனுப்பிருப்பாங்க, லட்சம் கார்கள் சென்றிருக்கும், ஆனால் அந்த கடைசி காருக்காக கண்ணீர் சிந்துகிறார்கள். ஒரு ஜனாதிபதி விடைபெருவதற்காக வணங்கி நிற்கும்போது, பிரதமர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறார். எங்கே இருக்கிறது மனிதாபிமானம்",  என்று பேசினார். இவரது இந்த கேள்வியை பலர் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
Embed widget