(Source: ECI/ABP News/ABP Majha)
Minister KN Nehru: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கும் இடத்தில் நாம் உள்ளோம் - அமைச்சர் கே.என் நேரு
திமுகவை நம்புங்கள், நமது தலைவரை முழுமையாக நம்புங்கள் ஒரு சில மாதங்களில் உங்களுடைய பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சி மேடையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். திமுகவை நம்புங்கள், நமது தலைவரை முழுமையாக நம்புங்கள் ஒரு சில மாதங்களில் உங்களுடைய பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். பல்வேறு நிதி சுமையா நமது முதலமைச்சர் ஆட்சியை நடத்தி வருகிறார். தினந்தோறும் தொடர்ந்து நமது ஆட்சியின் மீது பல்வேறு தரப்பினர் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்த கூடாது. மேலும் நம் அனைவரும் உண்மையாக தலைவருக்கு பணியாற்றினால், உழைப்புக்கு ஏற்ற பதவிகள் நிச்சயம் கிடைக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் சிறப்பாக தீவிரமாக பணியாற்ற வேண்டும். நாம் அனைவரும் தலைவரின் தம்பியாக, கலைஞரின் பிள்ளைகளாக சரியாக செயல்பட வேண்டும். நாம் சரியாக பணியாற்றவில்லை என்றால், மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம். நாம் அனைவரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கும் இடத்தில் உள்ளோம். ஆகையால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம் அனைவரும் தீவிரமாக செயலாற்றி வெற்றி பெறுவோம்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்