மேலும் அறிய

Watch Video: நாற்காலிக்காக கோபித்து வெளியேறிய காங்கிரஸ் எம்எல்ஏ… பின்வரிசையில் இடம் ஒதுக்கியதால் அதிருப்தி!

பிறகு முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தினர் மீண்டும் எம்.எல்.ஏவை சமரசம் செய்து மேடைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏவும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றார்.

அரசியல் நாற்காலிக்காக நடக்கும் போர் என்று கூறுவார்கள். ஆனால் நாற்காலிக்காகவே கோபித்துக்கொண்டு மேடையை விட்டு வெளியேறியிருக்கிறார் ம.பி.யில் எம்.எல்.ஏ ஒருவர். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மேடையில் தனக்கு முதல் வரிசையில் நாற்காலி கொடுக்காததால் அதிருப்தியில் மேடையை விட்டு வெளியேறிச் சென்றது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் தான்சன் சமரோ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் குவாலியர் (கிழக்கு) தொகுதியின் எம்.எல்.ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதிஷ் சிகர்வர் சென்றிருந்தார். அவருக்கு மேடையில் இரண்டாம் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு முன்வரிசையில் நாற்காலி ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ சதிஷ் சிகர்வர் மாவட்ட நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் அவர் மேடையிலிருந்து வெளியேறினார். மாவட்ட நிர்வாகத்தினர் அவரை சமரசம் செய்ய முயற்சித்த போதும் அவர் சமாதானம் அடையாமல் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். எம்.எல்.ஏ சதிஷ் சிகர்வர் மேடையை விட்டு சென்ற போது அங்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இருந்தார். அவர் வெளியேறியதை பார்த்து முத்லவரும் அதிர்ச்சியடைந்தார்.

பரபரப்புகளுக்குப் பிறகு முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தினர் மீண்டும் எம்.எல்.ஏவை சமரசம் செய்து மேடைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏவும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சதிஷ் சிகர்வர், “நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்னை அவமதித்துவிட்டனர். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். பாஜக தலைவர்களுக்கெல்லாம் முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கியிருந்தனர் ஆனால் எனக்கு ஒதுக்காதது என்னை அதிருப்திக்குள்ளாக்கியது. புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் டான்சென் நினைவாக நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதாலேயே நான் மீண்டும் மேடைக்கு வந்தேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget