Suresh Gopi: ”அய்யா என் வருமானம் போச்சு..அமைச்சர் பதவி வேண்டாம்!” மோடிக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் கோபி!
Union Minister Suresh Gopi: வருமானம் குறைந்து வருவதை காரணம் காட்டி, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார்.

Union Minister Suresh Gopi வருமானம் குறைந்து வருவதை காரணம் காட்டி, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார். அவருக்குப் பதிலாக பாஜக தலைவர் சி. சதானந்தன் மாஸ்டர் அமைச்சர் ஆவர் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பதவி ராஜினாமா:
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று (அக்டோபர் 12) தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார்.
சதானந்தன் கலந்து கொண்ட ஒரு விழாவில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, ” நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை (மத்திய) அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.

சதானந்தனின் எம்.பி. அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக மேம்படுத்தப்பட வேண்டும்.எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அமைச்சராக வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை. நான் இன்னும் சம்பாதிக்க வேண்டும். எனது வருமானம் இப்போது முற்றிலுமாக நின்றுவிட்டது”என்றார்.
சுரேஷ் கோபி மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் 2016ம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரு கேரள எம்.பி இவர் தான்.
சதானந்தன் மாஸ்டர் யார்?

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரான சதானந்தன் மாஸ்டர், அரசியல் வன்முறையில் இருந்து தப்பியவர். 1994 ஆம் ஆண்டு சிபிஐ(எம்) தொண்டர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலின் போது அவர் தனது இரண்டு கால்களையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



















