தனிப்பட்ட தாக்குதல் செய்வதே திமுகவின் தரமா? தங்கத்தை பார்த்து தகரம் குறை சொல்வதா? தவெக தாக்கு!
‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது - தவெக

எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம் என்று தவெக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தவெக இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார்.
’’ஓகே ஓகே’’ பட காமெடி
அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய முதல்வர் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
டென்ஷனில் உளறுவதா?
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.
ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.
திமுகவை துளைத்தெடுத்த துப்பாக்கி தோட்டா
நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவது ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.
தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்ததால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.
தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வதா?
எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.
பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது’’ என்று தவெக ஐ.டி. விங் சரமாரியாக விமர்சித்துள்ளது.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்























