மேலும் அறிய

9 வருடங்களுக்கு பிறகு இபிஎஸ்- உடன் கை கோர்க்கும் டிடிவி.! அதிமுக கூட்டணியில் அமமுக- ஓ.. இது தான் காரணமா?

TTV Dhinakaran joins ADMK BJP alliance: தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார் டிடிவி தினகரன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

நெருங்கும் தேர்தல்- கூட்டணியை இறுதி செய்யும் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் நேருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக இறுதி செய்துள்ளது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும், என்ற திட்டத்தோடு பாஜகவோடு கூட்டணியை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக பாமகவையும் தங்கள் அணியில் இணைத்தார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக அமமுக கட்சியை நடத்தி வரும்  டிடிவி தினகரனோடு வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதி செய்துள்ளது அதிமுக- பாஜக.

இதனை டிடிவி தினகரனும் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார்.  சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாத்திரமல்ல தமிழ்நாட்டிற்கு நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகின்ற நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக புறப்பட்டு செல்கிறோம்.

எங்களுக்குள் பங்காளி சண்டை தான்

விட்டுக் கொடுத்துப் போபவர்கள் என்றைக்கும் கெட்டுப் போனதில்லை என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் பங்காளி சண்டை தான் "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்"  என பொதுக் குழுவில் சொல்லிவிட்டேன்  நான் பழசையே நினைத்து விட்டு கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்பதற்காக பொதுநோக்கத்தோடு நாங்கள் விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் ஆட்சி கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து சட்டமன்ற தேர்தல் கூட்டணியை டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் டிடிவி தினகரனை வரவேற்று அழைத்து சென்றனர். இந்த சந்திப்பின் போது பாஜக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிமுக நிர்வாக்கிகள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு ஒதுக்கப்படும் உள் ஒதுக்கீடு மூலம் டிடிவி தினகரனுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியோடு டிடிவி தினகரனும் ஒரே மேடை ஏறவுள்ளனர்.  2017ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே மேடையில் சந்திக்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?

Embed widget