மேலும் அறிய

TN Corona Crisis: குறைத்து காட்டப்படும் கொரோனா இறப்பு; இபிஎஸ் குற்றச்சாட்டு

கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததால் இரண்டாவது அலை ஏற்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, உலகளவில் எந்த நாட்டிலும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று இபிஎஸ் பதிலளித்துள்ளார்.

கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  இன்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள். இறப்பு விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததால் இரண்டாவது அலை ஏற்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, உலகளவில் எந்த நாட்டிலும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று இபிஎஸ் பதில் அளித்தார். வல்லரசு நாடுகளிலும் கூட தற்போது வரை கொரோனா தொற்று உள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

TN Corona Crisis: குறைத்து காட்டப்படும் கொரோனா இறப்பு; இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 361 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த வாரம் தினசரி 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனாவால் 2 ஆயிரத்து 779 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இன்று 30 ஆயிரத்து 582 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 624 நபர்கள் ஆவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 69 ஆயிரத்து 810 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 8 ஆயிரத்து 773 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் ஆவர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 18 ஆயிரத்து 618 நபர்கள் ஆவர். பெண்கள் 14 ஆயிரத்து 743 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இன்று குணம் அடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 63 நபர்கள் ஆவர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒருநாள் மட்டும் 474 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 199 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 295 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 723 ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget