Tamil Nadu BJP: 4 பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு - எல்.முருகன் அறிவிப்பு
பாஜகவுக்கு இடமில்லை என்றனர். ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாஜக வளர்ந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

பாரதிய ஜனதா வெற்றி பெற்ற 04 தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும், அதேவேளையில் பாஜக 4 தொகுகளில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதில், கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே அரசியலுக்கு புதுமுகமான கமல்ஹாசனை பாஜக வீழ்த்தியது. மற்ற மூன்று இடங்களில் பாஜக வீழ்த்தியிருப்பது பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுகவை என்பது அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
6 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்று, 75 வயதில் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.காந்தி. மேலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
ராஜ்பவனில் கடந்த 7ஆம் தேதி எளிமையாக நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுடன்,4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோரும் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு இடமில்லை என்றனர். ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாஜக வளர்ந்துள்ளதாக எனவும் அவர் கூறினார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<a href="https://twitter.com/EPSTamilNadu?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@EPSTamilNadu</a> <a href="https://t.co/zcu974Jc4t" rel='nofollow'>pic.twitter.com/zcu974Jc4t</a></p>— Dr.L.Murugan (@Murugan_TNBJP) <a href="https://twitter.com/Murugan_TNBJP/status/1391761270320345091?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
முன்னதாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்.முருகன் வாழ்த்து கூறியிருந்தார். தமிழக பாஜக தலைவரின் இந்த அறிவிந்நு, சம்மந்தப்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

