அதிமுக - பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை? அன்புமணி ராமதாசை சந்தித்த முக்கிய தலைவர்! நடந்தது என்ன ?
Anbumani: "பாமக தலைவர் அன்புமணி ராமதாசை சந்தித்த தமிழக பாஜக சட்டப்பேரவை பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"

Anbumani Ramadoss: பாஜக தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா சென்னையில், அன்புமணி அன்புமணி ராமதாசை சந்தித்திருக்கும் நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக உட்கட்சி பிரச்சினை
தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும், கருத்து மோதலால் பாமகவின் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியை, திடீரென செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து செயல் தலைவராக ராமதாஸ் நியமத்திலிருந்து பிரச்சனை பூதாகரமாக மாறியது.
அன்புமணி பக்கம் மாவட்ட செயலாளர்
இதனைத் தொடர்ந்து, பாமகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களில் 98 சதவீத ஆதரவு அன்புமணிக்கு கிடைத்தது. இதனால் கோபம் அடைந்த ராமதாஸ், கட்சியிலிருந்து சென்றவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர்களை நியமிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ராமதாஸின் ஆதரவுகளாக இருந்த சிலரை, அன்புமணியின் பக்கம் சாயத்தொடங்கினர்.
ராமதாஸின் ஆதரவாளராக பார்க்கப்பட்ட பாமகவின் பொதுச் செயலாளர், வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் அன்புமணி பக்கம் வந்ததால் அமைப்பு ரீதியாக கட்சியை அன்புமணி முழுமையாக கைப்பற்றினார். மறுபுறம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் தங்கள் தரப்புக்கு கிடைத்ததாக அன்புமணி தரப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு மாம்பழச் சின்னம் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது.
பாமக யாருடன் கூட்டணி ?
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு முழுவதும் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அன்புமணி இதுவரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்தவும், நிர்வாகிகளுக்கு அன்புமணி உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் நிர்வாகிகள் இடம் அன்புமணி பேசுகையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மறைமுகமாக தெரிவித்து இருந்தார். விரைவில் நீங்கள் விரும்புகின்ற கூட்டணி அமையும் என நிர்வாகிகளுக்கு உற்சாகமளித்திருந்தார்.
பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் அன்புமணியுடன் சந்திப்பு
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சி தேசிய துணை தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. சென்னையில் நேற்று அன்புமணி ராமதாசை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்திற்கு மேலாக சென்றுள்ளது. இந்த சந்திப்பில் வைஜயந்த் பாண்டா, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் (2016 தேர்தலை தவிர்த்து) தொடர்ந்து பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக முக்கிய கட்சியாக இருந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியாக பாமக இருந்தது. தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்" என கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து இரண்டு கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், " பாமக கூட்டணிக்கு வருவது தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது. பாமகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசவில்லை" என நிறுவாகிகள் தெரிவித்துள்ளனர்





















