மேலும் அறிய

TN BJP leader: டெல்லி பறந்த நயினார்; பாஜக தலைவர் அப்டேட்- அமித்ஷா அறிவிப்பு?

அதிமுக கூட்டணிக்காக நயினார் நாகேந்திரனை தலைவராக்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ள நிலையில், அந்த ரேஸில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படும் நயினார் நாகேந்திரன் டெல்லிப் பயணம் மேற்கொள்ளப்போவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், நயினாரின் டெல்லி பயணம் அடுத்த தலைவர் இவர்தான் என்பதை உறுதி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எடப்பாடியை சமாதானம் செய்ய பலகட்டப் பேச்சு

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகளில் களமிறங்கியுள்ளது. திமுகவை ஆட்சியை விட்டு அனுப்பி ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அதிமுக. அதனால் கூட்டணி கணக்குகளை தொடங்கிய ஈபிஎஸ், பாஜக கூட்டணிக்கு செவிசாய்க்காமல் கறாராக இருந்து வந்தார். ஆனால் பாஜகவோ அதிமுக கூட்டணியை விரும்பும் நிலையில், எடப்பாடியை சமாதானம் செய்ய பலகட்டப் பேச்சு வார்த்தைகளையும் நடத்தியது.

2021 தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த அதிமுக, அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிமுக கூட்டணியை சாத்தியப்படுத்துவதற்கு அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்கவும் பாஜக தலைமை தயாராகிவிட்டது.

அண்ணாமலையை தூக்கத் திட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்ட நிலையில், அண்ணாமலையை தூக்கிவிட்டு அதிமுகவுடன் இணக்கமாக போகக் கூடிய ஒருவரை தலைவர் ஆக்கலாம் என நினைப்பதாக சொல்லப்பட்டது.

தற்போது அண்ணாமலையே, தான் மாநிலத் தலைவராக தொடரப்போவதில்லை என நேரடி ஹிண்ட்டும் கொடுத்துவிட்டார். இந்நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஏற்கனவே மாநிலத் தலைவர் ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இருப்பதாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் அதிமுக கூட்டணிக்காக நயினார் நாகேந்திரனை தலைவராக்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் அனைத்து கட்சிகளும் தென் மாவட்டங்களை குறிவைத்தே காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படும் நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கலாம் என்று பாஜக மேலிடம் கருதுவதாகவும் பேசப்பட்டது.

அடுத்த பாஜக தலைவர் யார்?

அதற்கு ஏற்றார்போல், தனக்கே தலைவர் பதவி கிடைக்கும் என நயினார் நாகேந்திரனும் காலரை தூக்கிவிட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி விஜயம் செய்துள்ளது இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவே அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Embed widget