மேலும் அறிய

Annamalai: “கூட்டணி கட்சிகளை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள்” - அதிமுக குறித்து அண்ணாமலை அதிரடி..!

அரசியலில் கூட்டணிக் கட்சிகளை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

அரசியலில் கூட்டணிக் கட்சிகளை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 

அரசியல் பயணமாக டெல்லி செல்லும் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, “ அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என பேசியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி கட்சிகளை வளர்க்க எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. கூட்டணிக் கட்சிகளை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  பாஜக வளர்ச்சியை அதிமுக விரும்பவில்லையோ என்ற கேள்விக்கு அண்ணாமலை இவ்வாறு பதிலளித்துள்ளார். 

பிரதமர் மோடி 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். சில உட்கட்சி விசயங்களை பேசுவது பதவிக்கு அழகல்ல. மக்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் என்ன பேசினாலும் வெளியே பேசுவது என் கடமை. காலமும் நேரமும் வரும் போது பேசுவேன். 

உள்கட்சியில் நடக்கும் விசயங்களை பேசுவது சரியாக இருக்காது.  உங்களிடம் சொல்ல வேண்டிய தகவலை கண்டிப்பாக பேசுவேன். 

கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால் 2 நாளில் பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன். 

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அதிகாலையில் கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சருக்கு சமூக வளைதளத்தில் வரும் கருத்துகள் முள் போல் குத்துகிறது. இத்தனை ஆண்டுகள் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது எந்தளவு பெருத்தன்மையை காட்டுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக தான் இருக்கிறது. 2021 ஆண்டை விட 2022ம் ஆண்டு முதல் அதிகரித்து விட்டது. 

அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து அரசு உளவுத்துறை, 70 ஆயிரம் போலீசார் கர்நாடக விற்கு அனுப்பட்டும். ஆட்சியே அவர்களிடம் இருக்கும் போது நான் என்ன பதில் சொல்ல வேண்டி உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினானா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். ஆட்சி, அரசு, அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது ஒருவரை கூட்டி வருங்கள். ஒரு மனிதனை எதிர்க்க இத்தனை பேரா. தமிழக வரலாற்றில் முதன் முறையாக பார்க்கிறேன். இந்த மனிதன் ஏதோ சிஸ்டத்தை கலைக்கிறான் என்று அர்த்தம். நல்லத்தை நோக்கி போகிறேன் என்பதால் தினமும் தாக்குதல் செய்கின்றனர். 2 போலீஸ் அதிகாரிகளை குழு அமைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அண்ணாமலை, குடும்பத்தினர் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளதா வருமான எங்கிருந்து வருகிறது. செல்போனை ஒட்டு கேட்கிறீர்கள் எல்லாம் உள்ளது. சாராய அமைச்சர் குற்றச்சாட்டு வைத்தால் அரசும் அதிகாரமும் உங்கள் பக்கம் இருப்பதை மறந்து விட வேண்டாம். 

கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பா.ஜ.க. வளர்ச்சியை ரசிக்க விரும்புவில்லை என்பதை பார்க்கிறேன். கூட்டணி கட்சியாக  யாராக இருந்தாலும் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். அவர்கள் பெரும் தலைவர்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் அல்ல. இதை எப்போ புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் பா.ஜ.க. வளர்ச்சி. அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகள் கிடையாது. அவரவர் கட்சிகளை வளர்க்க தான் இருக்கிறோம். அவர்கள் கட்சியை வளர்ச்சியை நாங்கள்  நிறுத்துகிறோம் என்ற கவலை இருக்கிறது. அது தவறு கிடையாது. 

தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை. உங்கள் கடையை திறக்க நான் ஆள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
December 2024:  கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
December 2024: கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
Rasipalan December 01:  கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?
Rasipalan December 01: கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?
Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?
Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?
Embed widget