அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் இறுதியில் அனாதையாகத்தான் போவார்கள் - சி.வி. சண்முகம்
அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் இறுதியில் அனாதையாக தான் போவார்கள் - சிவி சண்முகம்
அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் இறுதியில் அனாதையாக தான் போவார்கள் எனவும் திமுகவுடன் நேரிடையாக உறவு வைத்து அதிமுக கர வேட்டியை கட்டிக்கொண்டுதான் தான் அதிமுக என பன்னீர்செல்வம் கூறிகொள்வதாக சி.வி. சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அதிமுக தொடங்கப்பட்டு 51 வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் திமுகவை சார்ந்த கருனாநிதியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என தொடங்கப்பட்ட கட்சி அதிமுக எனவும் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் வாழ்ந்திருப்பார்.
அவர் இறப்பதற்காக காரணமாக இருந்த ஸ்டாலின், கருணநிதி, திமுகவுடன் நேரிடையாக உறவு வைத்து கொண்டு அதிமுக கர வேட்டியை கட்டி கொண்டுதான் தான் அதிமுக என பன்னீர் செல்வம் கூறி கொள்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும் அதிமுகவை எதிர்த்து நிற்பவர்களும், அதிமுக விற்கு திரோகம் இழைப்பவர்கள் எல்லோரும் அனாதையாக தான் போவார்கள் என்றும் பன்னீர்செல்வத்தோடு இருப்பவர்களை நிழல் கூட நம்பாது தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 16 மாதங்களில் மிக பெரிய மக்களிடம் எதிர்பினை பெற்ற திமுக அரசாக உள்ளதாகவும் எப்போது இந்த ஆட்சியை தூக்கி எறியலாம் என மக்கள் தயாராக உள்ளதாக கூறினார். திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யும் அராஜகங்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் திமுக விற்கு மிக பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.