Party Wise Vote Share: திமுக முதல் இமகமுக வரை: தமிழ்நாட்டில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவீதம் இதுதான்!
TN Election 2024 Party Wise Vote Share: தமிழ்நாட்டில் ஆளும் கட்சி முதல் திமுக முதல் சிறு கட்சிகள் வரை ஒவ்வொன்றும் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் பற்றிக் காணலாம்.
நாட்டின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்தியா கூட்டணியும் முறையே 290, 230 தொகுதிகளைப் பெற்றிருக்கின்றன.
நாற்பதும் நமதே; நடத்திக் காட்டிய திமுக!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளையும் திமுக தன்வசப்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியில் 1 தொகுதியோடு சேர்த்து, நாற்பதும் நமதே என்ற திமுகவின் முழக்கம் நனவாகி உள்ளது.
எனினும் திமுகவின் வாக்கு வங்கி கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைந்துள்ளது. இந்த முறை 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 25.89 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1.04 சதவீத வாக்குகளைப் பெற்றது. கொமதேக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து அதன் வாக்கு வங்கியையும் சேர்த்து திமுக மொத்தம் 26.93 சதவீதத்தைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 10.67 சதவீத வாக்குகளைத் தன்வசப்படுத்தி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 2.15 % வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் CPI(M) - 2.52 % வாக்குகளையும் பெற்றுள்ளன. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK ) 2.17 % வாக்குகளைப் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 46.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 23.05 %
வாக்கு வங்கி சதவீதத்தில் அதிமுக ஒட்டுமொத்த அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 23.05 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதிமுக தனியாக 19.40 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 0.56 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேபோல எஸ்டிபிஐ கட்சியும் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டு, 0.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனால் அதிமுக 20.46 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக 2.59 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 23.05 % வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது.
என்டிஏ கூட்டணி எவ்வளவு?
பாஜக 9.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 0.36 % வாக்குகளைப் பெற்றுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் ஏ.சி.சண்முகம், தாமரை சின்னத்தில் 0.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேபோல தாமரை சின்னத்தில் நின்று, இமகமுக 0.47% வாக்குகளையும் தமமுக 0.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. ஆக மொத்தத்தில் பாஜக, 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தமாகா (TMC) 0.87 % வாக்குகளையும் அமமுக (AMMK ) 0.9 % வாக்குகளையும் பெற்றுள்ளன. ஓபிஎஸ் தனித்து நின்று 0.79 % வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக என்டிஏ கூட்டணி 18.2% வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாதக நிலை என்ன?
தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி (NTK ) தமிழ்நாடு முழுவதிலும் 8.1 % வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல நோட்டா 1.06 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதே தகவல்களை அட்டவணை வடிவிலும் பார்க்கலாம்.
கட்சி | வாக்கு சதவீதம் |
திமுக |
25.89% |
கொமதேக | 1.04% (திமுக சின்னம்) |
காங்கிரஸ் |
10.67% |
சிபிஐ | 2.15% |
சிபிஎம் |
2.52% |
விசிக | 2.17% |
மதிமுக |
1.32% |
ஐயூஎம்எல் | 1.17% |
மொத்தம் (திமுக கூட்டணி) |
46.9% |
அதிமுக |
19.40%
|
புதிய தமிழகம் |
0.56% (அதிமுக சின்னம்) |
எஸ்டிபிஐ |
0.50%(அதிமுக சின்னம்) |
தேமுதிக |
2.59%
|
மொத்தம் (அதிமுக கூட்டணி) |
23.05% |
பாஜக |
11.24% |
பாமக |
4.1% |
தமாகா |
0.87% |
அமமுக |
0.9% |
ஓபிஎஸ் |
0.79% |
மொத்தம் |
18.2% |
நாம் தமிழர் கட்சி |
8.1% |