மேலும் அறிய
Advertisement
இந்திய அளவில் அம்பேத்கர் சிலையை நிறுவ தமிழகத்தில் தான் அதிக நெருக்கடிகள்: திருமாவளவன்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில், காஞ்சிபுரம் வடக்கு ஓன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஆளுயர அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஒன்றிய செயலாளர் தி.இளமாறன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இச்சிலை நிறுவ பாடுபட்ட 22 நபர்களுக்கு அம்பேத்கர் சிலை வழங்கி வாழ்த்தினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் , கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இன்று இதனை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தில் புதிய சிலை அமைக்க இன்றுவரை பெரும் சிரமத்தை காணும் நிலை உள்ளது .
"நான் ஒரு இந்துவாக பிறந்தேன். அது எனது முடிவல்ல. ஆனால், ஒரு இந்துவாக நான் இறக்கமாட்டேன்" என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1935ஆம் ஆண்டு இயலோ மாநாட்டில் கூறினார். 21 ஆண்டுகளுக்கு பின்னர் 14.10.1956 அன்று லட்சக்கணக்கானவர்களோடு இந்து மதத்தைவிட்டு வெளியேறி பவுத்தத்தை தழுவினார் pic.twitter.com/3NSbI0FxGO
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 29, 2022
பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலை வைப்பதிலும், சட்டமன்ற, நாடாளுமன்ற வளாகத்தில் என பிரமிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது. அம்பேத்கர் என்பவர் மடத்தின் மடாதிபதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் என்பது மட்டுமே .
அம்பேத்கர், பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். தற்போது தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களை குறி வைத்து செயல்படும் நிலை கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவம்பர் 6 ம்தேதி அமைதி அறப்போர் என்கிற வகையில் மனு ஸ்மிருதி குறித்து பொதுமக்ள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பேடு வழங்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் , காஞ்சி மண்டல செயலாளர் விடுதலைசெழியன் , மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ், மக்கள் மன்றம் நிர்வாகிகள் மகேஷ், ஜெர்சி , விசிகவை சேர்ந்த இந்திரா அம்பேத்கர்வளவன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின் , பருத்தி குளம் சேகர் , ஏரிக்கரை டேவிட் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கீழ்கதிர்பூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion