RN Ravi: உளறல்களை நிறுத்துங்கள்..தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு.. எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம்!
ஆளுநருக்கு, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருக்குறளில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர். “ ஜி.யூ. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புகளில் ஆதிபகவன் என்பதையே தவிர்த்துள்ளனர்.” என்று தெரிவித்திருந்தார்.
ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 26, 2022
உளறல்களை நிறுத்துங்கள்.2/2
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும்,
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 26, 2022
40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே,
கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள்.1/2 pic.twitter.com/dkrzf6wuCR
ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது என்ன?
டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association - DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஜி.யூ. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக பேசியிருந்தார்.
திருக்குறளை ஒரு விலைமதிப்பற்ற இந்திய வேதநூலாக மாற்ற காலனித்துவ ஆட்சியின் மோசமான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார் .@PMOIndia @EduMinOfIndia
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 25, 2022
இது குறித்து பேசிய ஆளுநர் கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஜி.யு.போப் போன்ற மிஷனரி உள்ளிட்டவைகள் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர். ஜி.யு.போப், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அவரது மொழிபெயர்ப்பு இன்றளவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அதில் ஆன்மீக ஞானத்தை சிறுமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. என்றும் அவர் பேசியிருந்தார்.