மேலும் அறிய

பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் கே.பாலகிருஷ்ணன்

பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தை தீர்க்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் என சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் நேற்று சிங்கபெருமாள் கோயில் கார்ல் மார்க்ஸ் 205வது பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் விளக்க பொதுக்கூட்டம், கட்சி நிதியளிப்பு என முப்பெரும் விழா காட்டாங்கொளத்தூர் பகுதி செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது,

கார்ப்பரேட் நிறுவனங்கள்

அதிக அளவில் பட்டினியால் அதிக அளவில் உயிரிழக்கும் நாடு மோடி ஆளும் இந்திய நாடு என ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஒரு காலத்தில் விவசாயத்தில் செழித்த மாவட்டம் தமிழகத்தில், ஏரிகள் நிறைந்த மாவட்டம், டெல்டா மாவட்டத்தை விட நெல் உற்பத்தியில் அதிகம் கொண்ட மாவட்டம், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் உள்ளதா. விவசாய நிலங்கள் உள்ளதா தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதி விளை நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளிகரம் செய்துவிட்டனர். ஒரு புறம் மகேந்திரா சிட்டியில் ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள். போர்டு நிறுவனம், நிறுவனத்தை மூடி விட்டு சென்றுவிட்டனர். பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வந்தால்,  தொழில் வளர்ச்சி வந்தால் நம்மை வாழ வைப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் தற்போது விவசாயம் இல்லை  நம்மிடம் இருந்த நிலங்களை எல்லாம் பறித்து விட்டார்கள் நம்மை ஒன்றும் இல்லாதவன் ஆக்கி விட்டனர்.

வேலை கிடைத்தால் போதும்

கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்தோம். வேலை கிடைக்கும் ஆனால் 10 ஆயிரம், 8 ஆயிரத்திற்கு கிடைக்கும். மகேந்திரா சிட்டியில் 2 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இதில் எத்தனை பேர் நிரந்தரப் பணியாளர்கள் , அனைவரையும் அத்து கூலி ஆட்களாக மாற்றி விட்டனர். கிராமங்களில் நிம்மதியாக வாழ்ந்து வந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை கடனாளிகளாக மாற்றி விட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தை சற்று சிந்தித்து பாருங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள், வேலையில்லாமல் அலைந்த கொண்டிருக்கின்ற, இந்த தொழிலாளர்களின் நிலையை சிந்தித்தூபாருங்கள் 10 ஆயிரம், 8 ஆயிரம் கொடுத்து தொழிலாளர்களை சுரண்டிவருகின்றனர் இதை நாம் ஏற்க முடியுமா வேலை கிடைத்தால் போதும் என்று போய் சேர்வது ஏற்புடையதா. இப்படிப்பட்ட தொழிலாளர்கள் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். போர்ட் தொழிற்சாலை திடீரென மூடிவிட்டு சென்றுவிட்டான். அதில் பணி செய்த தொழிலாளர்கள் மீண்டும் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

நிலங்களை மீட்டு கொடுங்கள்

மக்களை பாதிக்கும் அழுத்தமான பிரச்சனைகளுக்கு போராடுகின்ற கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ வேண்டும். தமிழகத்தில் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பஞ்சமி நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்தான் 200 ஆண்டுகளுக்கு முன்னாள் தலித் மக்களுக்கு ஒதுக்கினர். அந்த நிலம் தற்போது அவர்ளிடம் இருக்கின்றதா.  அந்த நிலங்களை மீட்டு கொடுங்கள் என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஏராளமாக உள்ளது. அடுத்து வரக்கூடிய  காலங்களில் பஞ்சமி நிலங்களை  மீட்கும் போராட்டத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

வருகிற 16ம் தேதி விழுப்புரத்தில் ஒரு சிறப்பு மாநாட்டை நடத்தவிருக்கின்றோம். காலம் காலமாக வர்ணாசிரமம் என்ற வெறி மனு தர்மம் என்கிற வெறி  மனிதனை மேல்சாதி கீழ்சாதி பிறித்து வைக்கின்ற கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. கிராமங்கள் தோறும் பழங்குடியின மக்கள், தலித் மக்கள் பட்டியலின மக்கள் அவமான படுத்தும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் மனிதன் மனிதனாக மதிக்க படுவதில்லை. பெரியார் போராடினார், அம்பேத்கர் போராடினார், இடதுசாரி அமைப்புகள், திராவிட அமைப்புகள் போராடினர் ஆனாலும்  சாதிய கொடுமை ஒழியவில்லை சாதிய கொடுமைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. இதற்கு மேலும் சாதிய கொடுமைகளை அனுமதிக்க முடியாது.  எனவே அடிப்படை சமுக மாற்றத்தை வலியுறுத்தி விழுப்புரத்தில்,  நடைபெறும் சிறப்பு மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.இக்கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.சேஷாத்திரி, வி.தமிழரசி உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட குழு உறுப்பனிர் பி.சண்முகம் நன்றி கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget