மேலும் அறிய

மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும் என கூறிய சௌமியா அன்புமணி - எதற்கு நோ சொல்ல வேண்டும் தெரியுமா...? 

தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும் என மயிலாடுதுறையில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி அறிவுரை வழங்கினார்.

மயிலாடுதுறையில் மாணவர்கள் மத்தியில் பேசிய பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல், தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதிய நூலக கட்டிட திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடில் செயல்பட்டு வரும் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளூர் மேம்பாட்டு நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும் என கூறிய சௌமியா அன்புமணி - எதற்கு நோ சொல்ல வேண்டும் தெரியுமா...? 

மாணவர்கள் மத்தியில் செளமியா அன்புமணி பேச்சு 

அதனை தொடர்ந்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றிய பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேசியதாவது ; மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் போன்ற கீதங்களை தவறாமல், பிழை இல்லாமல் எழுத வேண்டும். திரைநட்சத்திரங்களை கொண்டாடும் இன்றைய இளைய சமுதாயம் தன்னலம் பாராமல், உங்களுடைய வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 


மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும் என கூறிய சௌமியா அன்புமணி - எதற்கு நோ சொல்ல வேண்டும் தெரியுமா...? 

வாய்ப்புகளை எல்லாம் முறையாக பயன்படுத்த வேண்டும் 

மாணவர்கள் சமூக பற்றுடன் திகழ வேண்டும், உங்கள் நலனுக்காக பாடுபட்டு உழைக்கும் அரசு அதிகாரிகள் காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் பெயர்களையும், அவர்களுடைய பணிகளையும் நன்கு புரிந்து கொள்ள புரிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு இன்றைக்கு கல்வி மட்டுமன்றி தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நன்கு படிக்க வேண்டும். 

விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி


மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும் என கூறிய சௌமியா அன்புமணி - எதற்கு நோ சொல்ல வேண்டும் தெரியுமா...? 

தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியம் 

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற நிலைகள் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் மாணவர்கள் திட்டமிட்டு முயற்சி செய்து படித்தால் இலக்கை அடையலாம். வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் பொழுது தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியமானது என்றார். மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும் தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இடர்பாடுகள், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நீர், நிலம், காற்று மாசு படிவதால் புவி வெப்பமடைந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய நிலைகளை உணர்ந்து மாணவர்கள் புரிந்து கொண்டு வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இவ்விழாவில் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு செழியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெக வீரபாண்டியன், பாமக மாவட்ட தலைவர் கோ.சு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
Embed widget