மேலும் அறிய

Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்

Senthil Balaji Letter : விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் தன்னை வேறு வழக்கில் கைது செய்யக்கூடாது என திருவல்லிக்கேனி போலீசாருக்கு செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில் தவெக எம்எல்ஏக்களிடம் திமுக நிர்வாகிகள் பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தவெக எம்எல்ஏ இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் ஆஜராகமல் செந்தில் பாலாஜி இருந்து வந்தார். 

போலீசாருக்கு செந்தில் பாலாஜி கடிதம்

இந்த நிலையில், த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதீ திட்டம் தீட்டிய விவகாரத்தில் நீதிமன்றம் முன்  ஜாமின் வழங்கிய செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், வழக்கு பதிவில் தமது பெயர் மற்றும் தனது சகோதரர் அசோக் குமார் பெயர் இடம்பெறவில்லை. எனவே வழக்கு பதிவில் பெயர் இல்லாத போது இந்த வழக்கில் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். தனக்கு 35 clause(3)  BNS என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள செந்தில் பாலாஜி, தான் இந்த வழக்கின் கீழ் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார். 

மருத்துவ வசதி வேண்டும்

தான் ஒரு மக்கள் பிரதிநிதி அதுமட்டுமல்ல தான் ஒரு பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் எனவும் குறிப்பிட்டுள்ளார். தான் எங்கும் ஓடி ஒளியவில்லையெனவும், தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட அல்லது விசாரணைக்கு ஆஜராகும்பட்சத்தில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மருத்துவ வசதி வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அமைச்சர்கள் மிரட்டும் தோனியில் பொது இடங்களில் பேசி வருகின்றனர்.

கைது செய்ய மாட்டோம் உத்தரவாதம் தாங்க

தான் கரூர் சம்பவத்திற்கு காரணம் என தன்னை காரணம் காட்டி வருவதாகவும் தன்னுடைய ஆதரவாளர்களை கைது செய்து வருவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,  செந்தில் பாலாஜியை கைது செய்ய மாட்டோம் என கூறி திருவல்லிக்கேணி போலீசார் 35 clause(3)  BNS நோட்டீஸ் கொடுக்கலாமா.?  அல்லது நீதிமன்ற நிபந்தனை மதிக்காமல் இருப்பதால் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரின் முன் ஜாமினை ரத்து செய்ய நீதி மன்றத்தை நாடலாமா என திருவல்லிக்கேணி போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget