எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்..
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தேர்தலில் கர்ஹால் எம்.எல்.ஏவாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தேர்தலில் கர்ஹால் எம்.எல்.ஏவாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமாஜ் வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் எஸ்பி சிங் பாகேலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கர்ஹாலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், உத்தரப்பிரதேசம் உள்பட மற்ற நான்கு மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையேடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலில் மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தேர்தலில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில், சமாஜ் வாதி கட்சித் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்த முறையாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், முன்னாள் முதல்வரும், சமாஜ் வாதி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற்தேர்தலில், பாஜக 255 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை மட்டும் கைப்பற்றியதால் இந்த முறையும் தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் பாஜகவின் தலைமையில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யனாத் முதல் அமைச்சராகியுள்ளார்.
மேலும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பாஜகவின் எஸ்பி சிங் பாகேலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கர்ஹாலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த எம்எல்ஏ பதவியை இவர் ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தரப்பில் இருப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் சமாஜ்வாதி தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தான், அவர்களையெல்லாம் மகிழ்விக்கும் விதமாக தனது எம்பி பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.
#WATCH | Delhi: Samajwadi Party (SP) chief Akhilesh Yadav going to Lok Sabha Speaker Om Birla's office to resign from his membership of the House.
— ANI (@ANI) March 22, 2022
In the recently held Uttar Pradesh elections, he was elected as an MLA from the Karhal seat. pic.twitter.com/IBjc4jqr8t
குறிப்பாக அரசியல் சாசன விதிப்படி, இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதற்கானக் கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தேர்தலை தொடரவிரும்பாத அகிலேஷ் யாதவ், இனி வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.