மேலும் அறிய

“உனக்கென்னப்பா நீ பைத்தியம்” டிடிவி தினகரனை இபிஎஸ்க்காக வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை 10 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதோ என்ற கவலை எங்களுக்கு எழுந்துள்ளதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

டிடிவிக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் திமுக- தவெக இடையே தான் போட்டி, அதிமுக 3வது இடத்திற்கு சென்று விடும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக நிர்வாகியும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அம்மா அவர்களால் நீக்கி வைக்கப்பட்டவர், அடிப்படை உறுப்பினரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் தான் TTV தினகரன், அதிமுக தொடர்பாக தற்போது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் அபகரிக்க திட்டம் தீட்டினார் இது தான் உண்மை, கொச்சையாக சொல்ல வேண்டுமானால் அதிமுகவை ஆட்டைய போட பார்த்தார், அது நடைபெறவில்லை, டிடிவி தினகரனின் பருப்பு எடப்பாடி பழனிசாமியிடம் வேகவில்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடாக, வேதனையின் வெளிப்பாடாக அதிமுகவை விமர்சித்து வருகிறார். ஆனால் எந்தவித சத்தமும் இல்லாமல் 4.5 ஆண்டு காலம் ஒரு தொண்டர் நாடாள முடியுமா என்ற ஒரு புதிய இலக்கணத்தை படைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி, 

டிடிவிக்கு மனநிலை பாதிப்பா- ஆர்.பி.உதயகுமார்

உனக்கென்னப்பா பைத்தியம் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று கிராமங்களில் பேசுவார்கள்.அது போல தான் டிடிவி தினகரனின் பேச்சும் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை 10 ஆண்டுகள் நீக்கி வைத்திருந்ததால் அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதோ என்ற கவலை எங்களுக்கு எழுந்துள்ளது. தம்பிமார்களாக ஆனா நாங்கள், அண்ணன் டிடிவிக்கு  மனநலம் பாதிக்கப்பட்டு பொது வாழ்க்கையில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதோ என்கின்ற மிகப்பெரிய கவலை எங்களைப்போல தம்பிமார்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
கொடநாடு வழக்கு பற்றி டிடிவி தினகரன் பேசுகிறார், தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறித்து சட்டமன்றத்தில் நீண்ட விவதாம் நடத்தப்பட்டு அவைக்குறிப்பில் உள்ளது. ஆனால் டிடிவி தினரகன் சட்டசபைக்கு வந்ததில்லை. வந்தால் தானே தெரியும். நானும் ரவுடி, நானும் ரவுடி என வடிவேல் கூறுவது போல் சிம்ம சொப்பனமாக இருக்கிறாராம் டிடிவி தினகரன். யாருக்கு தான் தெரியவில்லை. ஆனால் இன்று மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி,  தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் 23ஆம் புலிகேசி நிலைக்கு டிடிவி தினகரன் சென்று விட்டார்.

டிடிவிக்கு சவால் விடுத்த ஆர்.பி.உதயகுமார்

ஒரு காலத்தில் டிடிவி தினகரன் செல்வாக்காக இருந்தார், இதனை நாங்கள் மறுக்கவில்லை, ஆனால் இன்று செல்வாக்கை இழந்து, பதவியை இழந்து, அடையாளத்தை இழந்து, ஆதரவை இழந்து, அரசியலில் அடிப்படை பண்புகளை எல்லாம் இன்று காற்றில் பறக்கவிட்டு அடாவடி அரசியலில் வனமத்தை வைத்து கொண்டு டிடிவி தினகரன் செயல்படுகிறார். நான் ஒரு சவால் விடுகிறேன், ஒரு மாதம் பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்தால் மக்கள் அவரை நினைப்பார்களா.? மறந்து விடுவார்களா.?என்பதை பார்க்கலாம். தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துகிறார். மக்களுக்கு சேவை செய்வதற்காக நடத்தவில்லை என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார். 

 

தலைப்பு செய்திகள்

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget