ராமதாஸ் - அன்புமணி சண்டையா ?... அண்ணாமலை ரியாக்ஷன் என்ன ?
Pmk: பாமக விவகாரம் குறித்து அண்ணாமலை தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லி செல்லுவதாக சென்னை விமான நிலையம் வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் நீதிமன்றம் கண்டனம் குறித்த விவகாரம் குறித்து கூறுகையில், சாதனையெல்லாம் இல்லை, ஆள் மனதில் இருந்து வந்ததை செய்துள்ளேன், பாதிக்கப்பட்ட அண்ணனாக நினைத்து கொள்ளுங்கள். அரசியல் ரீதியாக பார்க்காதீர்கள். எப்.ஐ.ஆர்., மனதில் இருந்து வந்திருக்கக்கூடிய கருத்தால் இல்லை என்பதே தீர்க்கமான சொல்லியுள்ளேன்.
லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்
அதே கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்பட பெண்ணுடைய தனிப்பட்ட விபரங்களை வெளியிட்டதற்காக 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், கல்வியும், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நல்ல செயலாக பார்க்கிறேன். நாளை அனைத்திந்திய தேசிய மகளிர் கமிஷன் வருகின்றனர். இது நடக்கும்போது உண்மையான குற்றவாளி தப்பிக்க முடியாது. சென்னை போலீஸ் கமிஷனர் கருத்துக்கும் உயர்நீதிமன்றம் கண்டனங்களை பதிவு செய்து உள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை உடனடியாக எடுத்து முக்கிய விஷயங்களை சொல்லியுள்ளனர்.
‘சிஸ்டம்’ கெட்டுபோய் விட்டது
எனவே இந்த வழக்கை கொண்டு செல்லும் என நினைக்கிறேன். அரசியல் தலைவராக பார்க்காதீர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணாக பாருங்கள். நேர்மையாக இருக்கக்கூடிய காவல்துறை நடுநிலையாக இல்லை. வெளியே கசியாத எப்.ஐ.ஆர்., எப்படி வெளியே வந்தது. கண்காணிப்பு பட்டியலில் இருக்க வேண்டிய ஒருவர் தார் காரில் சுற்றிக் கொண்டிருக்கிறார். ‘சிஸ்டம்’ கெட்டுபோய் விட்டது.
கருத்துகள் பிடிக்கவில்லை
சென்னையில் போராட்டம் நடத்தினாலும் கைது செய்து அடைத்து வைக்கின்றனர். இதில், கருத்து சுதந்திரம் எங்கு உள்ளது. எந்த வழியும் இல்லை. அதனால் தான் இந்த முடிவை தவமாக எடுத்துள்ளோம். திருமாவளவன் தமிழகத்தில் தான் இருக்கிறாரா,இல்லை வெளிநாட்டில் உள்ளாரா. அவர் ஒரு தனித்தீவு கட்டி வாழ்கிறாறோ என்னவோ. சமீபத்தில் அவர் பேசும் கருத்துகள் பிடிக்கவில்லை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் தான் முதலில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.
பாமக பிரச்சனை என்ன ?
உயர்கல்வித்துறை அமைச்சர் கருத்தும், போலீஸ் கமிஷனர் கருத்தும் எதிராக உள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் கட்சிக்கு ஆதரவு தருவதை விட திருமாவளவன் தரும் ஆதரவு அதிகமாக உள்ளது. டில்லியில் உள்துறை அமைச்சரிடம் இது குறித்து சொல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் மோதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு நடக்கவில்லை, கருத்து பரிமாற்றம் தான் நடைபெற்று உள்ளது என தெரிவித்தார்.