மேலும் அறிய
Advertisement
ரத்தான புரட்சி பயணம்..! மீண்டும் காஞ்சிபுரம் வந்த ஓபிஎஸ்..! அடுத்தடுத்து நடக்கும் சோகம்...!
காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் புரட்சி பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம், ரத்தான நிலையில் மீண்டும் காஞ்சிபுரம் வந்தார்.
கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்வி.ரஞ்சித் குமாரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம்
அதிமுக ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆர்வி.ரஞ்சித் குமார். ரஞ்சித் குமார் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஓபிஎஸ்-க்கு ரஞ்சித் மீது தனி பாசம் இருந்து வருகிறது. இவர் கடந்த மூன்றாம் தேதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும், சந்திக்கும் வகையில் புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் அடுத்த வையா ஒரு பகுதியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை, அறிவிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழையும் , ஓபிஎஸ் புரட்சி பயணமும்
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிலையிலும் புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டம் மீண்டும் காஞ்சிபுரத்தில் நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த நான்காம் தேதி ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரான, ஆர்.வி. ரஞ்சித் குமார் தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு வாலாஜாபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மீண்டும் நடந்தேறிய சோகம்
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்வி.ரஞ்சித்குமாருக்கு கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்து வேதனை அடைந்த பன்னீர்செல்வம் நேற்று மாலை வாலாஜாபாத் தனியார் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆர். வி.ரஞ்சித்குமாரை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
ஆறுதலான ஓபிஎஸ் அணியினர்
மேலும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்க கேட்டுக் கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகியை சந்தித்து ஆறுதல் கூற வந்த சம்பவத்தால், வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் புரட்சி பயணம் பொதுக்கூட்டத்தை துவங்கி அதிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு புரட்சிப் பயணம் மேற்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்ட நிலையில் அந்த பொதுக்கூட்டம், நின்று போனது ஓபிஎஸ் அணியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, தனது அணி நிர்வாகி ஒருவருக்கு ஏற்பட்ட சிறு பிரச்சனைக்கு நேரில் வந்து அவர் பார்த்துச் சென்று இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொண்டருக்கான தலைவர் ஓபிஎஸ் என சமூக வலைதளத்திலும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion