மேலும் அறிய

‛எச்.ராஜா மீதும், சுப்ரமணியசுவாமி மீதும் வழக்குத் தொடுக்க வக்கற்று நிற்பதேன்?’ -முதல்வர் மீது சீமான் பாய்ச்சல்!

Saattai Duraimurugan Arrest: கருணாநிதி எழுதிய பொழிப்புரையையுமாவது அறிவாரா ஐயா ஸ்டாலின்? -சீமான்

சாட்டை துரைமுருகன் கைது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை... அப்படியே இதோ!

‛எச்.ராஜா மீதும், சுப்ரமணியசுவாமி மீதும் வழக்குத் தொடுக்க வக்கற்று நிற்பதேன்?’ -முதல்வர் மீது சீமான் பாய்ச்சல்!

தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது பொய் வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது கொடுங்கோன்மையின் உச்சம்!

தமிழ்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது மீண்டும் பொய் வழக்கு புனைந்து, அவரைக் கைது செய்து சிறைப்படுத்தியிருக்கும் திமுக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அரசியல் பழிவாங்கும் போக்கோடு அவர் மீது ஏவப்படும் தொடர் அடக்குமுறைகளும், கடும் ஒடுக்குமுறைகளும், அடுத்தடுத்த வழக்குகளும் கருத்துரிமைக்கு எதிரான சனநாயகத்தை அழிக்கிற அரசதிகாரக் கொடுஞ்செயல்களாகும்.

பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் குறித்த செய்தியைப் பேசியதற்காகவே, அவர் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, கலவரத்தைத் தூண்ட முயன்றாரெனக் கூறி அதனைத் திரித்து, பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்ற வழக்கைப் பதிவு செய்திருப்பது எதன் பொருட்டும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும். வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் எந்த சட்ட நடைமுறைகளும் கடைபிடிக்கப்படாமல் ஆள்கடத்தல் போல அத்துமீறி நுழைந்து, அவரைக் கைது செய்து, அவரது குடும்பத்தினருக்குக்கூட தகவல் தராது, அவரது மனைவி, பிள்ளைகளை அலைக்கழிப்பு செய்தது சனநாயகம் மாண்புகளுக்கும், சட்ட நெறிமுறைகளுக்கு எதிரான அதிகார அத்துமீறலாகும்.

தனிப்பெரும் முதலாளிக்குச் சொந்தமான பாக்ஸ்கான் எனும் தொழிற்சாலையில் நடந்த அநீதிக்கெதிராகப் போராடிய பெண்பிள்ளைகள் மீது காவல்துறையினர் கொடுந்தாக்குதலை ஏவுவதும், போராடும் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் செல்வோரையும், அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துப் பரப்புரை செய்வோரையும் கொடுஞ்சட்டத்தின்கீழ் சிறைப்படுத்துவதும் கொடுங்கோன்மையாகும்.

பாதிக்கப்பட்ட மண்ணின் மக்களுக்கு ஆதரவாக நிற்காது, பன்னாட்டு நிறுவனத்தின் பக்கம்நின்று, அவர்களுக்காகக் காவல்துறையை ஏவல் ஆட்கள் போல பயன்படுத்துவதும் மண்ணின் பிள்ளைகளைத் தனிப்பெரு முதலாளிக்காக அடித்து உதைப்பதுமான செயல்கள் இங்கே நடப்பது மக்களுக்கெதிரான காட்டாட்சி என்பதை உறுதி செய்கிறது. மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட மாசற்ற இளைஞனான என் தம்பி துரைமுருகன் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தும் அளப்பெரியத் தாக்கத்தை சகிக்க முடியாது, ஆட்சி அதிகாரத்தால் தொடர்ச்சியாக அவரைக் கைது செய்து, உளவியலாக அச்சுறுத்தி அவரை முடக்க நினைப்பது திமுக அரசின் பாசிசப்போக்கின் உச்சமாகும்.

ஆறுமாதக் காலத்தில் மூன்றாவது முறையாக தம்பி துரைமுருகனைச் சிறைப்படுத்தும் திமுக அரசு, எச்.ராஜா மீதும், சுப்ரமணியசுவாமி மீது வழக்குத் தொடுக்க வக்கற்று நிற்பதேன்? அவர்கள் மத மோதலை உருவாக்கும் விதமாகவும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமாகவும் பேசியதற்கான சான்றுகள் இருக்கும்போதும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்ச திமுக பயப்படுவதேன்? மாரிதாஸ் மீதான வழக்கே ரத்தாகும் வண்ணம் வலுவில்லாத வாதத்தை முன்வைத்து, பணிந்ததேன்? எதற்காகவாவது இந்த விடியல் அரசிடம் பதிலுண்டா? கடந்த காலங்களில் அதிகாரத் திமிரிலும், பதவி போதையிலும் பிடித்து அலைந்த பெரும் பெரும் ஆட்சியாளர்களும், மன்னர்களும் வீழ்ந்தழிந்த வரலாறு தெரியுமா ஐயா ஸ்டாலினுக்கு? ஆணவமும், அதிகார மமதையும் கொண்டு மண்ணின் மக்கள் மீதும், போராளிகள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியக் கொடிய ஆட்சியாளர்களைக் காலமும், மக்களும் தூக்கியெறிந்ததெல்லாம் தெரியுமா ஐயா ஸ்டாலினுக்கு? ஒருவர் எதிர்க்கருத்து பேசுகிறாரென்பதாலோ, ஆட்சியை பற்றி விமர்சனம் வைக்கிறாரென்பதாலோ அவரைக் குறி வைத்து கைது செய்து சிறையிலடைத்து அச்சுறுத்த முனைவது கொடுங்கோல் தனத்தின் வெளிப்பாடேயாகும்.

‛எச்.ராஜா மீதும், சுப்ரமணியசுவாமி மீதும் வழக்குத் தொடுக்க வக்கற்று நிற்பதேன்?’ -முதல்வர் மீது சீமான் பாய்ச்சல்!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றையும், அதற்கு ஐயா கருணாநிதி எழுதிய பொழிப்புரையையுமாவது அறிவாரா ஐயா ஸ்டாலின்? தொடர்ச்சியானக் கைதுகள் மூலம் சாட்டை துரைமுருகன் மீது அரச வன்முறையை நிகழ்த்திய திமுக அரசு தான் இழைக்கிற அநீதிகளுக்கு எல்லாம் விரைவில் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

எனவே, தம்பி சாட்டை துரைமுருகன் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget