மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது - அமைச்சர் பொன்முடி
சென்னையில் தமிழக அரசின் நிவாரண பணிகளை பாஜகவினர், தினகரனும் வெளிப்படையான மனது இருந்ததால் பாராட்டி உள்ளனர் - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: சென்னையில் தமிழக அரசின் நிவாரண பணிகளை பாஜகவினரின் தினகரனும் வெளிப்படையான மனது இருந்ததால் பாராட்டி உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மட்டும் எல்லாத்திலும் அரசியல் பன்னனும் நினைப்பதால் அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என கூறுவதாகவும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடையாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இருந்து காசிக்கு 50 பேர் கொண்ட குழுவினர் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மிக்ஜாம் புயல் ஏற்பட்ட 3 ஆம் தேதி கயாவில் இருந்து சென்னைக்கு கிளம்பியபோது புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் அங்கிருந்து வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியதை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் அமைச்சர் பொன்முடியை தொடர்பு உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று 50 பேரும் வீடு திரும்ப தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வீடு திரும்பினர். வீடுதிரும்பியவர்கள் இன்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை அவரது இல்லத்தில் சந்தித்து வீடு திரும்ப நடவடிக்கை எடுத்தற்கு நன்றி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி மழை நீர் வெள்ளபாதிப்புகளை அரசியலுக்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் 2015 ல் அதிமுக ஆட்சியில் வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டபோது என்ன செய்தார்கள் என்பது சென்னை மக்களுக்கு தெரியும் 47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 2015 ல் ஏற்பட்ட வெள்ளபாதிப்பின் போது ஏற்பட்ட உயிரிழப்பில் இப்போது பத்து சதவிகிதம் கூட ஏற்படவில்லை என தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் பாஜகவினரின் தினகரனும் வெளிப்படையான மனது இருந்ததால் பாராட்டி உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மட்டும் எல்லாத்திலும் அரசியல் பன்னனும் நினைப்பதால் அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்பதாலே சொல்லுகிறார்களே தவிர மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடையாது என கூறினார். அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் முடுக்கி விட்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு தானே சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர் என்றும் சென்னையிப் மழைநீர் பாதிப்புகளை இரண்டே நாளில் வடிய நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்தார். சென்னையில் நிரந்தரமாக வெள்ள நீர் எப்போது வந்தாலும் சென்னை மக்கள் பாதிக்காமல் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.