Duraimurugan slams Karnataka :கொச்சைப்படுத்துவதா? மேகதாது விவகாரத்தில் சூடான துரைமுருகன்! கர்நாடக சிஎம்க்கு கண்டனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்புடையதல்ல:
மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை அரசியல் ஆதாயத்துக்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது பிரச்னை தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. இதை அரசியலாக்கும் எண்ணமோ, அவசியமோ தமிழ்நாடு அரசிற்கு இல்லை துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தவறான செய்தியாகும்:
அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், அதில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவு கர்நாடக முதலமைச்சர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு தெரிவித்திருப்ப்பது விந்தையாக உள்ளது. இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் பங்கேற்றாது அறிக்கையில் பதிவாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தை மீறிய செயலாகும்:
காவிரி நடுவர் மன்றம், இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில், அதுவும் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சி தத்துவத்தின்படியும், மாநிலங்கள் உச்சநீதிமன்ற ஆணையை மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்கு புறம்பானது. மேலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி எந்த மாநிலமும், பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது.
சட்டத்திற்கு புறம்பானதாகும்:
பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர்த் தேவைக்காக என்ற போர்வையில், அதுவும் 4.75 டி.எம்.சி தேவைக்காக, 67.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல, உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Also Read: Sharad Pawar : நோ சொன்ன சரத் பவார்... ஷாக்கான எதிர்க்கட்சிகள்!கூட்டத்தில் நடந்தது என்ன?
Also Read: ஒட்டினாலும் சண்டை! கிழித்தாலும் சண்டை! அதிமுகவில் தொடங்கிய போஸ்டர் யுத்தம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்