மேலும் அறிய

இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து, எச்சரித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

பாஜக அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து, எச்சரித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தேர்தல் முடிவு தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

மஜக நிர்வாகி இல்ல திருமண விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாணாதிராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு நூற்றுக்கு நூறு வெற்றி வாகை சூடும் வகையில் வாக்களித்த அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று புயல்வேக பரப்புரை முன்னெடுத்து இந்த சிறப்பான வெற்றியை சாத்திய படுத்தியதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வாக்காளர்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதமான எண்ண அலைகளை எதிரொலித்து உள்ளது. இந்தியா கூட்டணி மாபெரும் எழுச்சியை பெற்று மக்களின் நம்பிக்கைக்குரிய எதிர்க்கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமான பாஜகவின் வாக்குகளை குறைத்தும், காங்கிரஸ்க்கு கூடுதல் வாக்குகள் அளித்து இந்திய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். நாடு முழுவதும் முதல் தலைமுறையினர் விருப்ப தேர்வு இந்தியா கூட்டணியாக அமைந்திருக்கிறது. தாங்கள் அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய பிரதமர் மோடியும், அவர்சார்ந்த பாஜகவையும் மக்கள் எச்சரித்துள்ளனர். வேகத்தடையை உருவாக்கி, மனம்போன போக்கில் செயல்படாமல், அரசியல் சாசன சட்டத்தின் மாண்புகளை சீர் குலைக்க முடியாது என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.  

இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

இனி ராமரை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது

உத்திரபிரதேசத்தில் எதிர்பாராத எழுச்சியை வெளிப்படுத்திய வாக்காளர்கள், குறிப்பாக அயோத்தியில் பொதுமக்கள் தக்க பாடத்தை பாஜகவிற்கு புகட்டியுள்ளனர். இனி ராமரை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது. இந்தியர்கள் ஆகிய நாங்கள் இனி அண்ணன் தம்பிகளாகதான் இருப்போம், மீண்டும் அயோத்தி மண்ணையும், ராமரையும் காண்பித்து இந்து, முஸ்லிம் மற்றும் ஏனைய மக்களையும் இனி பிரித்திட அனுமதித்திட மாட்டேன் என்ற உறுதியான செய்தியினை வழங்கி அயோத்தி அடங்கிய பைசலாபாத் தொகுதியில் பெரும் தோல்வியை பாஜகவிற்கு வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில் ஆவது பாஜகவினர் மக்களின் தீர்ப்பை புரிந்து கொண்டு மதக்கலவரம் ஏற்படும் வண்ணம் பேசுவது, வெறுப்பு அரசியலை பரப்புவது, மக்கள்களின் இணக்கங்களை உடைக்க முயல்வது போன்ற தீய செயல்களில் இருந்து விடுவித்து கொண்டு, நாட்டின் ஒருமைப்பாடு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது

தொடர்ந்து பேசியவர், இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி குறைந்திருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்து இருப்பதாகவும், ஒப்புகைச் சீட்டு முறையை கொண்டு வந்து வாக்கு எண்ணிக்கையின் போது ஈவிஎம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இரண்டையும்  சரி பார்த்து முடிவுகளை அறிவிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதால் நேருவுடன் மோடியை ஒப்பிடுவது சரியல்ல. பாஜகவிடம் எந்த விதத்திலும் அடக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றார்.

பாஜகவிற்கு வேகத்தடை

மூன்றாவது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் 10 ஆண்டுகளில் சிதைந்து கிடப்பதாகவும், அனைத்து மக்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் மோடி ஆட்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார். பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இரண்டு சாணக்கியர்கள் இருப்பதாகவும், நாடாளுமன்றத் தொகுதி அதிகப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கருத்து தெரிவித்தார். மேலும் இரண்டு சாணக்கியர்களும் பாஜகவில் நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
Embed widget