மேலும் அறிய

Makkal Needhi Maiam | ‛தலைவர் பாதி... செயலாளர் பாதி... கலந்து செய்த கலவை நான்’ ம.நீ.ம., ஆளவந்தான் ஆனார் கமல்!

தலைவர் பாதி... பொதுச் செயலாளர் பாதி... என மநீம.,வில் இனி ஆளவந்தானாக கமல் ஆளுமை செய்வார் என்கிறார்கள், அவரது தொண்டர்கள்.!

தற்போது அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்வேன் என கடந்த மே 24ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர்  கமலஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த இணையவழி கலந்துரையாடலில் மநீம தலைவர்  கமலஹாசன் உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது..

'கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும். நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களை செய்திருக்கிறேன். அதன்படி கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச்செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரண்டு அரசியல் ஆலோசகர்கள், 2 துணைத் தலைவர்கள், 3 மாநில செயலாளர்கள், நிர்வாக குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்' என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

மேலும் 'புதிய மாநில செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டவர்கள் தான். எனினும் அவர்களை பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்'. சிவ. இளங்கோ சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்ட போராட்டங்களை தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்'.

'செந்தில் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு சமூக பணி செய்ய வேண்டும் என்ற தனது இலட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர், தகவல் அறியும் உரிமை சட்டத்தை முழுமையாக பயன்படுத்துவது என மக்கள் நலன்சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்'

'சரத் பாபு, தன் கடின உழைப்பினாலும் திறமையாலும் வெற்றிகரமான தொழில் முனைவோராக திகழ்பவர். ஃபுட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்'

புதிய நியமனங்கள்.

பழ. கருப்பையா - அரசியல் ஆலோசகர் 
பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர் 
ஏ.ஜி மௌரியா - துணைத்தலைவர் - கட்டமைப்பு 
தங்கவேலு - துணைத்தலைவர் களப்பணி மற்றும் செயல்படுத்துதல் 
செந்தில் ஆறுமுகம் - மாநில செயலாளர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு 
சிவ. இளங்கோ - மாநிலச் செயலாளர் கட்டமைப்பு 
சரத்பாபு - மாநில செயலாளர் தலைமை நிலையம் 
ஸ்ரீபிரியா சேதுபதி - நிர்வாகக்குழு உறுப்பினர் 
ஜி. நாகராஜன் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்பு மிக்க இவர்களை என்னோடு சேர்த்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்கி இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை உருவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் கட்சி தலைவர் கமல்ஹாசன். ஏற்கனவே தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் கமல், பொதுச்செயலாளர் பொறுப்பையும் தன்வசமாக்கி, அதை அவரே அறிவித்துள்ளார். இதன் மூலம், கடவுள் பாதி, மிருகம் பாதி என்கிற ஆளவந்தான் பாடல் வரியை போல, தலைவர் பாதி... பொதுச் செயலாளர் பாதி... என மநீம.,வில் இனி ஆளவந்தானாக கமல் ஆளுமை செய்வார் என்கிறார்கள், அவரது தொண்டர்கள்.!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget