’கடத்தல் வழக்கு’ நீதிமன்றத்தில் ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தி - பரபரப்பு வாதங்கள்..!
'காவல்துறை உயரதிகாரி ஜெயராமனுக்கு எதிராகவே போலீஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டுளை முன் வைத்துள்ளது’

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன் ஜாமீன்கோரி கே.வி. குப்பம் எம்.எல்.ஏவும் புதிய பாரதம் கட்சித் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி தொடர்ந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்தார் பூவை ஜெகன் மூர்த்தி. முன்னதாக, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இந்த வழக்கில் பூவை ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு உள்ளது என்று காவல்துறை சார்பில் நீதிபதி முன்பு வாதிடப்பட்டு வருகிறது. காவல்துறையின் உயரதிகாரியாக இருக்கும் ஜெயராமனுக்கு எதிராகவே காவல்துறை இந்த வழக்கில் வாதிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















