மேலும் அறிய

Lok Sabha Election: சூடுபிடிக்கும் தேர்தல்! நான்கு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024: (Kanchipuram Lok Sabha Constituency 2024 )

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும்.

செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.

சரிபார்ப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-னை முன்னிட்டு ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் EVM  (ம)  வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் VVPAT ஆகியவை வழங்கும் பொருட்டு  காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள வாக்குபதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

Lok Sabha Election: சூடுபிடிக்கும் தேர்தல்!  நான்கு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!

சரிபார்த்தலின்போது (First Randomization) காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்,  தொடர்பு அலுவலர் / சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை கன்னியாகுமரி தொழிற்திட்டம், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து மேற்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு  இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரம் கீழ்கண்ட எண்ணிக்கையில்  பிரித்து அளிக்கப்பட்டது.

வ.எண்

தொகுதி எண் மற்றும் பெயர்

Ballot Unit

Control Unit Count

VVPAT Unit Count

1

28. ஆலந்தூர்

481

481

521

2

29. திருப்பெரும்புதூர்

438

438

474

3

36. உத்திரமேரூர்

362

362

392

4

37. காஞ்சிபுரம்

396

396

429

மேற்படி சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் AJS Nidhi பள்ளி, சென்னையிலும் ஆகிய இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் காப்பு அறையில் (Strong room) வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Lok Sabha Election: சூடுபிடிக்கும் தேர்தல்!  நான்கு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!

மேலும் அக்காப்பு அறையானது 24 x 7 என்ற நிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். அனைத்து பாதுகாப்பு அறையிலும் CCTV Camera பொருத்தப்பட்டு 24x7 பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தயாராகும் தேர்தல் அலுவலர்கள்

தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்தல் பயிற்சியும் துவங்கியுள்ளது.  ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்த அனுபவம் உள்ள அலுவலர்களைக் கொண்டு,  கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று  தொடர்ந்து தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்களுக்கு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்  அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget