அரசியலமைப்பு சட்டம் பற்றி ஆளுநரின் பேச்சு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - கே.எஸ் அழகிரி
பாராளுமன்ற தேர்தலில் 15 தொகுதி கேட்கப் போவதாக நான் சொல்லவில்லை கட்சியினரின் ஆசையாக அது உள்ளது - கே.எஸ்.அழகிரி
![அரசியலமைப்பு சட்டம் பற்றி ஆளுநரின் பேச்சு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - கே.எஸ் அழகிரி KS Azagiri says Governor's speech on Constitution Act kitten is out TNN அரசியலமைப்பு சட்டம் பற்றி ஆளுநரின் பேச்சு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - கே.எஸ் அழகிரி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/75e4fdff9ab15574dcfb1fb378e72a991700921835716571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு திசையன்விளை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த் , ஜெயக்குமார் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், சங்கர பாண்டியன் மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது:
தமிழக ஆளுநர் எல்லை மீறி செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதை தான் உச்சநீதிமன்றமும் ஆளுநர் வழக்கில் சொல்லி உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. முன்கூட்டியே இதனை ஏற்று ஆளுநர் செயல்பட்டு இருக்கலாம். தெரிந்தும் தெரியாததை போல் ஆளுநர் ரவி நடித்திருக்கிறார். சட்டமன்றம் கொண்டு வந்த மசோதா மீதான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் கையில் வைத்துள்ளது. அரசுக்கு எதிரான குற்றம் அரசுக்கு எதிராக செய்த குற்றத்திற்கான தண்டனையை அவருக்கு வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை பணி செய்ய விடாமல் தடுக்கும் சதியை ஆளுநர் செய்து உள்ளார். திட்டமிட்ட சதியை கலந்து பேசி செய்துள்ள ஆளுநர் ராஜினாமா செய்வாரா? அல்லது தொடர்ந்து நீடிப்பாரா என்பது தெரியவில்லை. தமிழக ஆளுநர் அரச குற்றம் செய்து உள்ளார், ஆளுநர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. அது தான் அவர் பதவிக்கு அழகு. நடந்து வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தேவதை எங்கள் பக்கம் உள்ளார். மகத்தான வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல் பேசி சரி செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலில் 15 தொகுதி கேட்கப் போவதாக நான் சொல்லவில்லை கட்சியினரின் ஆசையாக அது உள்ளது என்றார்.இந்திய அரசியலைமைப்புச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் முழுமைப்பெறாத ஆவணம் என்ற ஆளுநரின் பேச்சு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதை காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்பது தான் ஆர் எஸ் எஸின் கொள்கை. அவர்கள் காசியில் கூடி இதுவரை 700 பக்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுகின்றனர்.
அம்பேத்கார் எழுதிய அரசியல் சட்டத்திற்கு மாற்றாக, காந்தி, நேருவின் வழிகாட்டுதல் படி எந்த அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதோ அதற்கு எதிராகவும், யாரெல்லாம் தனது உயிரை பனையம் வைத்து இந்த நாட்டிற்காக சுதந்திரம் படைத்து அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார்களோ அதற்கு எதிராகவும், சாதி, மதம், மொழியை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் விரும்புகிறது. அதை தான் அவர் சொல்லியிருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாதது என சொல்வதே மற்றொரு குற்றம். அவர் மீது வழக்கு தொடரலாம். அவருக்கு சிறை தண்டனை கூட கொடுக்கலாம் தப்பில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், குஷ்பு எதற்காக திமுகவில் சேர்ந்தார். பின்னர் எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். அதன்பின் ஏன் பாஜகவிற்கு போனார். இதோடா அவர் பயணம் நின்று விடுமா அல்லது இன்னும் தொடருமா? ஒரு கருத்தை சொல்லும் போது இயன்றவரை பிரச்சினை வராமல் கருத்து சொல்வது தான் சிறப்பு, எதற்காக அந்த உவமையை சொன்னார், சொல்லிவிட்டு பிரஞ்சு மொழியில் இருக்கிறது என சொன்னார். அவர் சொன்னதற்கும் பிரெஞ்சு மொழிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் முடிச்சி போடுவது போல் ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு பிரெஞ்சு மொழி என்கிறார். அவர் மீது வருத்தப்படும் பொழுது, அல்லது கண்டனம் தெரிவிக்கும் பொழுது ஒரு நல்ல பதிலை சொல்ல வேண்டுமே தவிர நான் காத்திருக்கிறேன் என்ற பதிலை சொல்லக்கூடாது அது தவறு. தமிழக காங்கிரஸ் பூரண மது விலக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)