Kerala on GST: மத்திய அரசு கேட்கும் ஜிஎஸ்டி எல்லாம் நாங்க தரமுடியாது; கேரள முதல்வர் சொன்னது என்ன?
Kerala on GST: மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரிகளை விதித்துள்ளதை கேரள அரசு குறைக்கச் சொல்லி கடிதம் எழுதியுள்ளது.
Kerala on GST: மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரிகளை விதித்துள்ளதை கேரள அரசு குறைக்கச் சொல்லி கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு அண்மையில் பால், அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரிகளை விதித்தது. இதனை நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகளும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளும் கட்சிகளும் வன்மையாக கண்டித்தன. அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை கண்டித்து மக்களவையில் எதிர் கட்சி உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்காக மக்களவையின் மையப்பகுதியில் சென்று முழக்கங்களை எழுப்பியதற்காக காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் மாணிக்கம் தாகூர், ஆகியோரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
We will not impose GST on smaller quantity items sold by Kudumbashree and small stores. This was the stand Kerala has taken in the GST Council meeting. Kerala sent a letter to Centre to reduce GST on essential commodities: Kerala CM Pinarayi Vijayan pic.twitter.com/TuBod2MA64
— ANI (@ANI) July 26, 2022
இந்நிலையில் கேரளாவில் அம்மாநில அரசு இன்று நடத்திய ஜிஎஸ்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களான பால், அரிசி, கோதுமை போன்றவற்றின் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியினைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு விதித்துள்ள பொருட்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்து வருபவர்கள் விற்பனை செய்துவந்தால் அவர்கள் இடம் எந்தவிதமான ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது. மேலும் குடும்பப் பெண்கள் நடத்தும் சிறு குறு விற்பனை நிலையங்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்