முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வாங்கல் காவல் நிலைய போலீசார் நீதிபதியிடம் ஏழு நாள் விசாரணை நடத்த அனுமதி.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 22ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரண்டு நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரண்டு நாள் விசாரணை முடிந்து இன்று பிற்பகல் மீண்டும் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வாங்கல் காவல் நிலைய போலீசார் நீதிபதியிடம் ஏழு நாள் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதி பரத்குமார் ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.