மேலும் அறிய

Kamalhaasan: ஒருவனும் முழுநேர அரசியல்வாதி கிடையாது.. கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்!

எனக்கு எல்லா வசதிகள் நீங்கள் கொடுத்தும் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டால், உங்கள் அன்புக்கு இன்னும் கைம்மாறு செய்யவில்லை என அர்த்தம்.

நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இன்றோடு 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடியேற்றினார். தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய கமல்ஹாசன் அனல் பறக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்தார். 

அப்போது, “இந்த 7 ஆண்டுகள் எப்படி கடந்தது என தெரியவில்லை என சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கணமும் எனக்கு புரிந்தது, தெரிந்தது. நேர்மையும், உத்வேகமும் தான் என்பது எனக்கு தெரிந்தது. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. மக்களுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்ற சோகத்தில் வந்தவன். என்னை எல்லாரும் கேட்கிறார்கள். நீங்கள் படங்களில் நடிக்கிறீர்களே,  முழுநேர அரசியல்வாதி என்பது இல்லையா? என எல்லாரும் கேட்பதாக என் கட்சிக்காரர்கள் கூட சொன்னார்கள். முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? - அப்படி என்ற ஒருவனும் இல்லை.

அவனவனுக்கு 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் வேலை, 4 மணி நேரம் குடும்பத்தில் இருந்தாக வேண்டும். இங்கு நீங்கள் முழுநேர அரசியல்வாதி யார் என்பதை சொல்லுங்கள், நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் என சொல்கிறேன். எனக்கு எல்லா வசதிகள் நீங்கள் கொடுத்தும் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டால், உங்கள் அன்புக்கு இன்னும் கைம்மாறு செய்யவில்லை என அர்த்தம். ஏன் முழு நேர அரசியலில் வரவில்லை என கேட்பவர்களுக்கு, அரசியலில் நான் செய்வது எல்லாம் நான் சம்பாதித்த பணத்தில் செய்தது. 

இந்த திமிரெல்லாம் எனக்கு பெரியாரிடம் இருந்து வந்தது. நான் கோவை தெற்கு தொகுதியில் தோற்றதற்கு காரணம் 90 ஆயிரம் பேர் வாக்கை செலுத்தாததால் தான். இந்தியாவில் 40% மக்கள் ஓட்டு போடாமல் இருக்கிறார்கள். தேர்தலில் ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்கின்றவன் நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற முடியாது. என்னை அரசியலுக்கு வருவது கஷ்டம் என சொன்னார்கள். போக வைக்கிறது அதை விட கஷ்டம் என சொல்லிக் கொள்கிறேன். 

நான் சும்மா சொல்லவில்லை. எஞ்சிய வாழ்நாளை கொடுப்பது சுலபமல்ல. இனி என்னுடைய எல்லாம் உங்களுடையது தான். அத்தகைய ஆளை நீங்கள் தூக்கி பிடிக்க வேண்டும். நான் உங்களிடம் திருட வரவில்லை. என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் சக அரசியல்வாதிகள் என நினைப்பவர்கள் வியாபாரிகள். அவர்களை பார்த்து ஆசைப்படாதீர்கள்.  இந்த அரசியல் என்பதே வேறு. ஏற்கனவே மக்களிடம் பெற்றதற்காக வட்டியை நான் செலுத்துகிறேன் என நினைத்தால் தான் இந்த அரசியலுக்கு வர முடியும். இது நாளைய சமுதாயத்துக்கு தேறும். கொள்ளைக்கூட்டத்தில் நாமும் தீப்பந்தம் பிடித்து சொல்வோம் என நினைக்காதீர்கள், இதை மாற்ற வந்தவர்கள் நாம். கட்சி எல்லாம் இரண்டாவது தான், தேசம் தான் முதலில் முக்கியம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget