CM MK Stalin: ”நம்முடைய எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. அவர்களுக்கு பயம் காட்டுவோம்” - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!
கல்வியில் சிறந்த தமிழ்நாடு கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நான் வைத்த கோரிக்கை:
தமிழ்நாடு அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில்,’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,” இந்த நிகழ்ச்சி நடத்தியதற்கு முக்கிய காரணம் எங்களை பாராட்டிக்கொள்ள அல்ல. உங்களை கொண்டாடுவதை பார்த்து அடுத்து பேட்ஜ் மாணவர்களுக்கும் படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இங்கு இருக்கும் மாணவ,மாணவிகளை பார்க்கும் பொழுது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாணவச்செல்வங்களே நீங்கள் படித்து முன்னேறுவதால் நீங்கள் மட்டும் முன்னேறவில்லை.
உங்கள் குடும்பம் முன்னேறுகிறது. குடும்பம் முன்னேறினால் மாநிலமும் முன்னேறுகிறது. ஆயிரம் ஆண்டுகளாய் சாதி எனும் கால் முளைத்த சதி அந்த சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்திற்கு எதிராக கழகம் செய்த புரட்சியாளர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
அந்த தொடர்ச்சியின் உச்சமாய் திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் நிகழ்த்திய புரட்சி தான் இந்த அளவிற்கு வேகமாக நடைபோட காரணமாக இருக்கிறது. தொடக்க கல்வியை முடித்து விட்டு மேல்கல்விக்கு போகக்கூடிய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என சட்டமன்ற உறுப்பினராக நான் முதன் முதலில் அவையில் எடுத்து வைத்த கோரிக்கையை ஏற்று இலவச பஸ்பாஸ் திட்டத்தை கலைஞர் அறிமுகபடுத்தினார்.
தடை ஏற்படுத்தலாம் என ஒன்றியத்தில் நினைக்கிறார்கள்:
அடுத்ததாக தலைவர் கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு பீஸ் இல்லை என்று அறிவித்தார். எல்லா சமூகத்தினருக்கும் கல்விச்சாலைக்கு செல்வதற்கு இட ஒதிக்கீட்டை உயர்த்தினார். இப்படி ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நமது கல்விப்பயணம். பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளியில் படித்த 1878 மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.
கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் எழுச்சி இந்தியாவின் பல மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன. திட்டங்களை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்த ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சியை பொறுத்துகொள்ள முடியாமல் தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என ஒன்றியத்தில் நினைக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியை பார்த்து ஒதுக்க முடியாமல் தடை ஏற்படுத்தும் சிலருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும். அது நிச்சயம் நமது திட்டங்களாலும், உங்களின் சாதனைகளாலும் நடக்கும்.
அனைவருக்கும் கல்வி, உயர்தரக்கல்வி, எந்தக் காரணத்தினாலும் கல்வி நிலையத்திற்குள் ஒருவர் வராமல் இருக்கக் கூடாது, தடுக்கப்படக்கூடாது. மாணவர்களான உங்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்று தான் நம்முடைய அரசு உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்துக்கொண்டு உயர உயர பறக்க வேண்டும். பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். இன்று அதனை பலர் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகம் மிகவும் பெரிது.
அதனால், இளநிலை மட்டுமின்றி, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு என தொடர்ந்து மேலே படிக்க வேண்டும். உங்கள் படிப்புக்கு துணையாக வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும். மாறும் அதனை நிச்சயமாக மாற்றுவோம்”என்று கூறினார் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.






















