” நா- நயம் மிக்க கலைஞருக்கு நாணயம் வெளியீடு: சொல்லமுடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன் “- முதலமைச்சர் ஸ்டாலின்
kalaignar Karunanidhi 100 Rupee Coin Released: இன்றைக்கு நாம் பார்க்கும் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர்தான் என நாணய வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கலைஞர் ரூ. 100 நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
”நா நயமிக்க தலைவர் “
கலைஞர் ரூ. 100 நினைவு நாணயம் வெளியிடப்பட்டதையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ நான் உணர்வுகளை சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன், நா நயமிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியீடு செய்யப்பட்டிருப்பது பொருத்தமானது. இன்றைக்கு நாம் பார்க்கும் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர்தான்.
'தமிழ் வெல்லும்' என்ற கலைஞரின் கையெழுத்துடன் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியீடு#MKStalin #DMK #KalaignarCoin #RajnathSingh pic.twitter.com/dUVnoOSWWj
— ABP Nadu (@abpnadu) August 18, 2024
பல்வேறு திட்டங்கள்:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிர் உரிமைத்தொகை, மதுரை கலைஞர் நூலகம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை, திட்டங்களை பட்டியலிட்டு சொன்னால் ஒருநாள் போதாது.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அனைத்து முதலமைச்சர்கள் நாட்டில் கொடி ஏற்றினார்கள். அதற்கான அத்தனை உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. செயல்படுவதும், செயல்பட வைப்பதும் அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கருணாநிதி. இது எனது அரசு அல்ல நமது அரசு, ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு" என்றார்.
மத்திய அரசுக்கு நன்றி:
இந்திய ஜனநாயகத்தின் அரணாக இருந்த கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவது பொருத்தமனது.
பல அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், இதர அரசியல் கட்சியினருடன் நேர்முறையான நட்புடன் பழகக்கூடியவர் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கலைஞரின் நாணயத்தை வெளியிட ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்த நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என முதலமைசச்ர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Also Read: கலைஞர் நினைவு நாணய விழா! வாழ்த்திய பிரதமர்.. நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்