மேலும் அறிய

Duraimurugan DMK : எப்பா சாமி.. கட்சியே வேண்டாம்.? ஒதுங்கும் துரைமுருகன்- திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்.?

Duraimurugan DMK General Secretary : திமுக தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியில் தலைமை முதல் கிளைக்கழகம் வரை மாற்றம் செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தேர்தல் தோல்வி- காரணம் என்ன.?

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 2.o திராவிட மாடல் ஆட்சி அமையும் என திமுகவினர் உறுதியாக நம்பிய நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கான காரணத்தை திமுக தலைமை கண்டறிய குழுவானது அமைத்துள்ளது. இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தோல்விக்கான காரணத்தை கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் மிக முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில், காட்பாடியார் என அழைக்கப்படுபவர் தான் துரைமுருகன்,  தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

யார் இந்த துரைமுருகன்.?

எம்.ஜி.ஆரின்  அரவணைப்பில் படித்தவர் தான் துரைமுருகன், எம்.ஜி.ஆர் நடிப்பில் ஈர்க்கப்பட்டாலும் திமுகவிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 1971 ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதுவரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று கருணாநிதி மற்றும் ஸ்டாலின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். திமுகவிலும் துணைப் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர், பொருளாளர் என முக்கிய பொறுப்புகளை வகித்தவர், திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவிற்கு பிறகு திமுகவின் பொதுச்செயலாளராக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.

துரைமுருகனின் தேர்தல் தோல்வி

இந்த நிலையில் திமுகவின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வந்த துரைமுருகன் திமுகவின் முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வேட்பாளரை துரைமுருகன் வீழ்த்திருந்தார். எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டார். எனவே உடல் நிலை பாதிப்பு காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல் வெளியான நிலையில், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் அமைச்சரவையில் இடம் பிடித்து விடலாம் என தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால் இந்த முறை 3வது இடத்திற்கு துரைமுருகன் தள்ளப்பட்டு தோல்வி தழுவினார்.

துரைமுருகனுக்கு உடல் நிலை பாதிப்பு

தற்போது 87 வயதாகும் துரைமுருகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக திமுக நிகழ்வுகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் உள்ளார். மேலும் இளைய தலைமுறை தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் ஆலோசித்துள்ளார். அந்த வகையில் விரைவில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த பொதுச்செயலாளர் யார்.?

இதன் காரணமாக திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்.? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக பொதுச்செயலாளர் ரேஸில் தற்போது பொருளாளார் பதவியில் உள்ள டி.ஆர். பாலு பெயர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தாக திமுக முதன்மை செயலாளராக இருப்பவர் கே.என். நேரு இவரது பெயரும் உள்ளது. ஆனால் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் திமுகவின் இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் இதற்கான விடையானது கிடைக்கும் என கூறப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget