ஓபிஎஸ் மனைவியை சந்தித்த ஜெயலலிதா: உதவியாளரின் உருக்கமான பதிவு!
ஜெயலலிதாவின் உதவியாளர் முகநூலில் போடப்பட்டுள்ள அந்த பதிவை, அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
![ஓபிஎஸ் மனைவியை சந்தித்த ஜெயலலிதா: உதவியாளரின் உருக்கமான பதிவு! Former Chief Minister Jayalalithaa's meet OPS wife ஓபிஎஸ் மனைவியை சந்தித்த ஜெயலலிதா: உதவியாளரின் உருக்கமான பதிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/dabe1579eeac9ea982b40c38b1e6197c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.45 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. இன்று காலை சென்னையில் அவரது உடல் வைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கட்சி பேதம் பார்க்காமல் வந்து மரியாதை செய்து, ஓபிஎஸ்.,க்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றம், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் முன்பு ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜெயலலிதா நேரில் வந்து மருத்துவமனையில் அவரை சந்தித்த நலம் விசாரித்த போட்டோவை அவர் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி
இதற்கிடையில், மறைந்த விஜயலட்சுமியின் உடல், நாளை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
விஜயலட்சுமி மறைவு தொடர்பான கூடுதல் செய்திகள் இதோ...
கண்ணீர் விட்ட சசிகலா..கையெடுத்து கும்பிட்ட OPS..காட்சிகள்https://t.co/wupaoCQKa2 | #OPanneerselvam | #OPS | #AIADMK | #Vijayalakshmi | #Sasikala | @OfficeOfOPS | #MKStalin | #EPS pic.twitter.com/nMCuRiksVM
— ABP Nadu (@abpnadu) September 1, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)