மேலும் அறிய

EPS: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை..

டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்பதை உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

" மக்கள் தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அரசிடமோ, ஆட்சியாளர்களிடமோ முறையிடுவார்கள். ஆனால், அரசே நடத்தும் நிறுவனத்தில் தவறுகள் நடந்தால் யாரிடம் முறையிடுவது? கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விடியா ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்படும் கடைகள் மற்றும் பார்களில் நடக்கும் அவலங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள்.

உயிரிழப்பு:

கடந்த மே மாதம், தஞ்சாவூரில் சட்ட விரோத பார் ஒன்றில் மது அருந்திய எஸ். குப்புசாமி (68) மற்றும் டி விவேக் (35) ஆகிய இரு மீன் வியாபாரிகள் அரசு மருத்துவமனைகளில் மரணமடைந்துள்ளனர். அவர்கள் சயனைட் அருந்தியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் சயனைட் உட்கொண்டவுடன் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இருவரது உடற்கூறாய்வை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடத்த நாள் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அரசு கேளா காதினராய் இருந்தது.

மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை, மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் இறந்துள்ளார். இவருடன் மது அருந்திய 16 வயது சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ வல்லுனர்களா காவல்துறை?

காவல் துறை, இறந்தவரின் உடலை உடற்கூறாய்வு செய்து பரிசோதிப்பதற்கு முன்னரே, அவர்கள் பெயிண்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தண்ணீருக்கு பதில் கலந்து குடித்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எப்போதிருந்து காவல் துறை அதிகாரிகள் மருத்துவத்தில் வல்லுனர்களாகத் திகழ்ந்து, ஆளும் அரசுக்கு சாதகமான பதிலை பத்திரிக்கை செய்திகளாக தருகின்றனர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. எனவே, இந்த நேர்விலாவது அரசு, இறப்பு ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளியிட வலியுறுத்துகிறேன்.

தமிழ் நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்த செய்திகளை வெளியிடாத ஊடகங்களே இல்லை. சட்ட விரோத பார்; அதில் விற்கப்படும் சில்லறை மதுவில் முறைகேடுகள் என்று கொள்ளை அடிக்கும் ஒரு போலி திராவிட மாடல் கும்பலை 75 ஆண்டுகால சுதந்திர இந்தியா கண்டதில்லை.

குரங்கு கையில் பூமாலை:

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த சோதனை நடவடிக்கைகள் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரு சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், அப்பாவி மக்களின் நிலத்தை பறிப்பது, அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி விஞ்ஞான முறையில் கோடிகளை கருட்டுதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தது வெளிச்சமாகி உள்ளது. கள்ளச் சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணம் சில லட்சங்களை வீசி அவர்களது வாயை அடைத்துவிடலாம் என்ற மனப்பான்மையை முதலமைச்சர்  ஸ்டாலின் செயல்பாடுகள் மூலம் உணர முடிகிறது. தவறு செய்பக்கூடிய கட்சிக்காரர்களையோ, அமைச்சர்களையோ தட்டிக் கேட்டு அணிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற பொம்மை முதலைமச்சராக ஸ்டாலின் இருப்பது வெட்கக்கேடானது. கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச் சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் பரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய திமுக நிர்வாகி மரூர் ராஜா கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து உலகமே வியக்கும் வண்ணம் ஆயிரக்கணக்காளோரை கைது செய்து, தமிழகக் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது. 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருந்த திமுக, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல், ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தை பின்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது கண்டு தமிழக மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

நடவடிக்கை தேவை:

சட்ட விரோத மது பார்கள் மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும் சட்ட விரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்பதை காவல் துறை ஆய்வு செய்து உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வணிக வரித்துறை அதிகாரிகள் எப்படி தனியார் வணிக நிறுவனங்களை அடிக்கடி ஆய்வு செய்கிறார்களோ, அதுபோல் டாஸ்மாக் கடைகளிலும் கலால் முத்திரை உள்ள மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை, கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget